பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் & 83 உணவின் அளவு குறைகின்றது. உடலும் இளைத்து வாடிய நிலையில் காணப்படுகின்றது. இந்நிலை அவன் நண்பன் தலைவனைச் சந்திக்கின்றான். அவனை நோக்கி, 'ஆருயிர் நண்பா, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இறைவனே தலைவனாக இருந்து சங்கப் புலவர்களுடன் ஒண் தீந்தமிழை ஆய்ந்ததாகச் சொல்லுவார்கள். 'இறையனார் களவியல் அவர் செய்த அகத்துறை இலக்கணம் அல்லவா? அகத்துறைப்பாடல்களில் உள்ளத்தைப் பறிகொடுத்தும், ஏழிசையில் அமைந்த பாடல்களில் ஆழங்கால் பட்டு அநுபவித்தும் உணவை மறந்து விட்டாயோ? இங்ஙனம் உன் தோள்கள் மெலிவுற்று வாடியிருப்பதற்குக் காரணம் என்னவோ?’ என்று வினவுகின்றான். தமிழின் பெருமையை உணர்த்தும் இப்பாடலுடன் இன்னொரு பாடலையும் அண்ணல் அவையின் முன் வைத்து பக்தியின் கொடுமுடிக்கு சைவ அடியார்களை இட்டுச் சென்றிருக்கலாம். ஆனந்த வெள்ளத்து அழுந்தும்.ஓர் ஆருயிர் ஈருருக்கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத் திளைத்தால் ஒக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத்து அறைகழலோன் அருள்பெற்று அவரின் ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது.இவ் அணிநலமே." என்பது. தலைவன் தலைவியரின் கலவி இன்பத்தைக் கூறுவதாக இருந்தாலும், சிவனடியார்கள் தில்லையம்பலவன் திருவடிகளின் அருளைப் பெற்றவரின் பேரின்பம்போல் என்று உவமை கூறி விளக்குவது அற்புதம். உவமிக்கப்படும் பொருளை விட உவமப் பொருள் சிறந்திருக்க வேண்டும் 13. திருக்கோவை - 307