பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. என்பது இலக்கணவிதி. ஈண்டு பேரின்பம் சிற்றின்பத்திற்கு உவமையாக அமைந்துள்ளது. சிவானந்த இன்பத்தின் பெருமையை உணர்த்துவதால் இப்பாடல் அண்ணலாரின் சைவப் பேருரையில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத இடம் தருகின்றது. மூவர்தமிழ்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்பவரின் தேவாரத் தமிழ்ப்பாடல்கள் அண்ணலாரின் பொழிவில் இன்றியமையாது இடம்பெற்றிருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடக் கருதுகின்றேன். சம்பத்தர். இந்தக் காழிப்பிள்ளையார் தேவாரத் தொகுப்பில் முதல் இடம் பெறுகின்றார். சம்பந்தப் பெருமான் தம் செயலால் தான் என்னும் உயிர் முனைப்பு அடங்கப் பெற்றவர். உயிர்க்குயிராய்த் திகழும் சிவபெருமானின் வழி வாய்ந்த செம்புலச் செல்வர். ஆகவே, அப்பெருமான் அருளிய திருப்பாசுரங்கள் சிவபெருமான் அருளிச் செய்த மறைமொழி களாகவே கொண்டு போற்றத்தக்கவை என்று போற்றுவர் பெரியோர். காழிப் பிள்ளையாரே, மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த்தானம் நிலையினான் எனதுரைதனதுரை யாக நீறணிந்தேறுகந்தேறியநிமலன்" என வரும் இலம்பயம் கோட்டுர்த் திருப்பதிகத்தால் தாம் பாடிய திருப்பாடல்கள் யாவும் இறைவன் தன்னவையாகக் கொண்ட குறிப்பு அறியப் பெறுகின்றது. இதனை நம் அண்ணல் தெளிவாக அறிந்திருத்தல் கூடும். இவர்தம் படைப்புகளால் அறியக் கூடவில்லை. எனினும், கற்பனையால் ஒன்றிரண்டு காட்டுவேன். புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந் திட்டுஜம்மேல் உந்தி 14. சம்பந்தக் தேவாரம் - 1.78: