பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே" என்ற முதற்பாடலையுடைய பாடல்கள் அனைத்தும் அண்ணலார் சமயச் சொற்பொழிவுகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். நாவுக்கரசர் நாவுக்கரசரின் வாழ்வு நலவாழ்வு, அற்புதத் திருவாழ்வு. தமிழோடு இசைபாடிச் சிவானந்தத்தை அதுபவித்த பெருவாழ்வு. தொண்டு நெறியே இவர் கடைப்பிடித்த நெறி. இவர் வாழ்விலும் பாடல்களிலும் ஈடுபட்ட அண்ணல் விசுவநாதத்திற்கு இவர்தம் வாழ்வும் நெறியும் வழிகாட்டி இருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது. அடியார்க்குத் தொண்டு பட்டு, மனிதரில் தலையாய அப் பெருமக்களை வாழ்த்தி வணங்கப் போற்றுதலே மகிழ்வளிக்கும் என்பதனைத் தெளிந்தவரல்லவா வாகீசர், இதனை, வானந்துளங்கிலென்? மண்கம்ப மாகில்னன்? மால்வரையும் தானந்துளங்கித் தலைதடு மாறில்னன்? தண்கடலுள் மீனம் படில்என்? விரிசுடர் விழில்என்? வேலைநஞ்சு ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்டஉத்தமர்க்கே" என்ற திருவிருத்தப் பாடலால் காட்டுவர். நாவுக்கரசர் பெருமானும் ஐந்தெழுத்தின் பெருமையை வெளிப்படையாகவே கூறியுள்ளார். சொற்றுணை வேதியன் (4.11) என்ற பதிகத்தின் நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே (2), நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே (3), நடுக்கத்தைக் 17. stuosog: 3.22:ł 18.அப்பர்தேவாரம் 4.12:8