பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&ಣಿ லர் கி.ஆ.பெ. வி. வேண்டுகின்றார். இவற்றையெல்லாம் அண்ணல் விசுவநாதம் இளமையில் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். திருநீறும் அக்க மணியும் பூண்டு சிவபெருமானை இடையறாது போற்றும் மெய்யடியார்களைச் சிவபெரு மானாகவே மதித்து, அன்னவர் பிறந்த குலம் முதலியவற்றைக் கருதாமல், வழிபடும் அன்புடையார் திருஉள்ளத்திலே காண்டற்கரியபெருமானைக் கண்டு மகிழலாம் என்பதுஅப்பர் பெருமானின் திருவருளநுபவமாகும். சிவகதியாகிய நற்பயிர் விளைவதற்கு மக்கள் கடைப் பிடிக்க வேண்டும் முறைகளை, மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி ിങ്ങജഥകളേ.“ என்ற திருநேரிசையில் உருக்கமாக விரித்துக் கூறிய முறையையும் அண்ணல் விசுவநாதம் நன்கு அறிவர். நாவுக்கரசர் தொண்டு புரிவதில் சிறந்த உழவராகத் திகழ்ந்தவர் என்பதையும் உழவாரப் படையைத் தாங்கிக் கொண்டி ருப்பவர் என்பதையும் யாவரும் அறிவர். திருநீறும் அக்கமணியும் பூண்டு சிவபெருமானை இடையறாது போற்றும் மெய்யடியார்களைச் சிவபெருமா னாகவே மதித்து, அன்னவர் பிறந்த குலம் முதலியவற்றைக் கருதாமல், வழிபடும் அன்புடையார் திருவுள்ளத்திலே காண்டற்கறிய பெருமானைக் கண்டு மகிழலாம் என்பது அப்பர் பெருமானின் திருவருளமுதமாகும். 20. மேலது 4.76 : 2