பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின்அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன்இறைவன் என்றெழுதிக்காட்டொணாதே." எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான்திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன்மற்றோர்களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின்அல்லால் ஒண்ணுளேஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலுர்மேவிய புண்ணியனே. 24 என்ற பாடல்களும், முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள்.அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்தன்னாமம் கேட்டாள்; தலைப்பட்டாள்.நங்கை தலைவன் தாளே." என்ற அகத்துறைப் பாடலும் புலவர்கள் நாவில் அடிக்கடி வழிவதை நாம் அறிவோம். இறுதியில் குறிப்பிட்ட பாடல் கல்கியின் புதினத்திலும் இடம் பெற்று விட்டது. இவற்றை யெல்லாம் அண்ணல் விசுவநாதம் அடிக்கடித் தம் சொற்பொழிவுகளில் கையாண்டிருத்தல் வேண்டும். 23. அப்தே, 6.97 : 1.0 24, ♔ 8.98 : ; 25. மேலது 8.25 :7