பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. கற்றவர்தொழுதேத்தும் சீர்க்கறை யூரிற்பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுணைநான்மறக்கினும் சொல்லுநன் நமச்சி வாயவே." என்பது பாண்டிக்கொடுமுடி பற்றிய முதற்பாடல். பாடல் தோறும் சொல்லு நாநமச்சிவாயவே என்ற தொடர் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இப்பதிகத்தில் நம் அண்ணல் ஆழங்கால் பட்டிருத்தல் வேண்டும். அடியவர்க்கடியன்: இறைவன் அடியெடுத்துக் கொடுக்க 'திருத்தொண்டத் தொகை (7.89) பாடியருளினார் சுந்தரமூர்த்தி. திருவாரூர் திருக்கோயில் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் அடியார்கள் எல்லார்க்கும் தனித்தனியே 'அடியேன்” எனப் பணிமொழி பகர்ந்து பாடுகின்றார். (11 பாடல்கள்; தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்; திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான்தன்குடிமாறன் அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரிபொழில்சூழ் குன்றையார் விறல்மிண்டர்க் கடியேன்: அல்லிமென் முல்லையடந்தார் அடர்நீதிக் கடியேன் ஆரூரன்ஆரூரில் அம்மானுக்காளே” என்பது முதற்பாடல். இப்பதிகம் தோன்றிய வரலாறு முதல் அனைத்தையும் அறிவார் விசுவநாதம். இதிலிருந்து தோன்றியது நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதி (வழிநூல்) தோன்றியதென்றும், இதிலிருந்து சேக்கிழாரின் பெரியபுராணம் தோன்றியதென்றும் (சார்புநூல்) நம் அண்ணல் நன்கு அறிவர். 27. கத்தே.7.48 : 28.3.33: