பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் * 73 புலவர்க்கு அறவுரை: திருப்புகலூர் பதிகம் புலவர்க்கு அறவுரையாக அமைந்தது. இது எழுந்த வரலாற்றை நம் அண்ணல் நன்கு அறிவார். தம்மையேபுகழ்ந்திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர் காள்! இம்மையேதரும் சோறும் கூறையும் ஏத்தலாம்இடர்கெடலுமாம் அம்மையேசிவலோகம் ஆள்வதற் கியாது மையுற வில்லை Gug.” என்பது முதற்பாடல். சைவப் பெருமக்களிடம் புகழ் பெற்ற பதிகம் இது. கந்தரரின் சிற்றம் பலவன் வழிபாடு: நம்பியாரூர் சிற்றம்பலவனைத் திருக்களிற்றுப் படியின் மருங்கே நின்று வீழ்ந்து வணங்கியதைச் சேக்கிழார் பெருமான் அற்புதமான பாடல் ஒன்றால் குறிப்பிடுவார். ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையன் ஆடும்.ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள்திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.' 29. திருப்புகலூர் - அப்பர் பெருமான் முத்தி பெற்ற தலம். நன்னிலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து தான்கு கல்தொலைவிலுள்ளது(நான் திருப்பதியிருந்தபோது வழிபட்ட தலம்) 30.அ ப்.தே.7.34: ! 31. டிேபு. தடுத்தகட் கொண்ட - 108