பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 'இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள்கூரக் கல்லாத கலையும், வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே? யாகொல்இச்சொல்லின்செல்வன்." என்று. அதுமனது கவர்ச்சிகரமான தோற்றம், அவன் பேச்சில் கண்ட நளினம், பேசிய இன்முகம் இவற்றால் ஈர்க்கப்பெற்ற காகுத்தன் அநுமனுக்குச்

  • சொல்லின்செல்வன்’

என்ற பெயர் சூட்டுகின்றான். அநுமனது தோற்றம் சக்கரவர்த்தித் திருமகனை ஈர்த்தது போல், அண்ணல் விசுவநாதத்தின் தோற்றம் அவரைக் கண்டார் அனைவரையும் ஈர்க்கும் என்று சொல்லலாம். 1934இல் திருச்சியில் யான் அவரைத் தெப்பகுளம் பிஷப்ஹீபர் கல்லூரியில் நாவலர் வேங்கடசாமி நாட்டார் அய்யாவுடன் கண்டபோது’ என் மனத்தில் பதிந்த தோற்றத்தை அப்படியே தருகின்றேன். 'நெடியோன்போல் கம்பீரமான தோற்றம்; சுமார் ஆறடி உயரம்; பொன்னிறத் திருமேனி, ஒழுங்காக வாரி விடப்பெற்ற கிராப்புத் தலைமுடி. அவரது நெடிய உருவத்திற்கு அழகு தருவது போல பொன்னிறமாக மின்னும் மூக்குக் கண்ணாடி. மெல்லிய மஸ்வீன் ஆடையால் கீழ்ப்பாச்சு கட்டிய நிலை; நீண்ட சொக்காய்; அதன் மேலே நீண்ட சால்வை; இவர்தாம் நான் கண்ட அண்ணல் விசுவநாதம்'. அக்காலத்தில், ஃபாதர் லாரன்ஸ் சுந்தரம் செகப்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தைப் பாடமாக நடத்திக் கொண்டிருந்தார். அந்நாடகத்தில் மானசீகமாக அந்தோணியை 2. Bisog - Øst. 26 3.அப்போது நாள் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்ற காலம். எனக்கு அகவை 18: அண்ணனுக்கு வயது 35.