பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் * 77 அண்ணல் விசுவநாதம் நினைவுறுத்திய காட்சி இன்றளவும் மனத்தில் பசுமையாக உள்ளது. சொல்லும் பொருளும்: ஒருவரது பேச்சில் அல்லது சொற்பொழிவில் சொல்லும் அதன் பொருளும் பொருத்தமாக அமைந்து, ஆற்றொழுக்காகக் கருத்துகளை விளங்கும் பாங்கில் நடைபெற வேண்டும். அப்படிச் சென்றால்தான் பேசுவோர், உரை ஆற்றுவோர் வெற்றிநடை போடுகின்றார் எனக் கருதலாம். மாறாக பொருளின்றிச்சொல்லடுக்குகள் மட்டிலும் இருப்பின் அப்பேச்சு வெறும் வானவேடிக்கையாக முடிந்து விடும்; வெற்றுரையாகக் காட்சியளிக்கும். குபீல் சுந்தரேசன்: நான் முசிறியில் உயர்நிலைப் பள்ளியில் (1931-34) பயின்றபொழுது ஆங்கிலத்தைக் கையாளும் அருமையைக் காட்டுவதற்கு திருச்சியில் அக்காலத்தில் ஆங்கிலப் பேச்சில் புகழ்பெற்ற குdல் சுந்தரேசனை வருவித்து உரையாற்றும் ஏற்பாடு நடைபெற்றது. அவர் வந்து உரையாற்றினார். வெறும் இருசொல் அலங்காரம், முச்சொல் அலங்காரம் என்றவாறு பேச்சு அமைந்திருந்தது. உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கிருந்த எங்கள் ஆங்கில அறிவைக்கொண்டு பெரும்பாலான சொற்களுக்குப் பொருள் தெரியாதநிலை. ஈ நுழைவதும் தெரியாது வாயைப் பிளந்து கொண்டு வாளா கேட்டுக் கொண்டு மகிழ்ந்தோம். சிவகாசி ஊசிப்பட்டாசு சரம் தொடர்ந்து வெடித்தது போன்ற அநுபவம் பெற்றோம். சொற்பொழிவுப் பயிற்சி: நான் துறையூரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாகப் பணியாற்றியபோது சுய மரியாதை இயக்கம் பல இடங்களில் உயர்நிலைப்பள்ளி மேல் வகுப்பு மாணாக்களில் பள்ளிக்கொருவராகத் தேர்ந்தெடுத்து பல இடங்களில் பயிற்சி முகாம் அமைத்து பயிற்சி தந்து கொண்டிருந்தது. து.மா. பெரியசாமி என்ற மாணவனைக் கரூர் முகாமிற்கு அனுப்பி வைத்தேன். அறிஞர் அண்ணா பொருள் பொதிந்த அடுக்குத் தொடர்கள் அமைந்து பேசினதுபோல் மாணாக்கர்கட்குப் பயிற்சி அளிக்கப் பெற்றது. இந்தப் புது