பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. நடையில் கட்டுரைகள், பேச்சுகள் அமைந்த 'திராவிட நாடு என்ற வார இதழ் இப்பயிற்சி பெறுப வர்களின் பேச்சுக்கு மேலும் துணையாக இருந்தது. அக்காலத்தில் எங்குப் பார்த்தாலும் இந்த இளைஞர்கள் அடுக்கு மொழியில் பேசி வந்ததைக் காண முடிந்தது. 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி, மூத்த குடி என்றோ, அமிழ்தினும் இனிய தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோ, 'முத்தமிழ் வளர்த்த சங்ககாலம் தொட்டு என்றோ பேச்சுகள் தொடங்கும். அடுக்கு மொழிகளில் அரசியல் போக்கில், தடைமுறை அரசியலில் கருத்துகளைக் கொண்டு பேச்சு அமையும். கருத்தைப் பற்றிச் சிந்தனை இருக்காது. பட்டத்து நூல் விடுகிற மாதிரி பேச்சு போய்க் கொண்டிருக்கும். இன்னொரு வியப்பு என்னவென்றால், சீர்திருத்தத் திருமணத்திலும், கட்சிக்காரர் ஒருவர் இறந்து விட்டால் இழவு வாசலிலும் வேறுபாடு கருதாது ஒரே பாணியில் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான் இவற்றை வியப்புடன் கேட்டுக் கொண்டிருப்பேன். அண்ணல் விசுவநாதம் அவர்கள் இவற்றையெல்லாம் நன்கு அறிவார். விசுவநாதம்: நான் அவரை அறிமுகப்படுத்திக் கொண்ட காலம் அவர் நன்கு முதிர்ந்த தெளிவான நிலைகளில் பேசிக் கொண்டிருந்த காலம். பெரும்பாலும் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் இவர்களோடு இருந்து பேசியவற்றைக் கேட்டு மகிழ்ந்தகாலம். காரைக்குடியில் பணியாற்றிய காலத்திலும் (1950-60 செட்டிநாட்டுப் பகுதிகளில் கல்லூரி, பள்ளி ஆண்டு விழாக்களிலும், தமிழ்த் திருமண நிகழ்ச்சிகளிலும் இவர் பேச்சைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. சில சமயம் நானும் அந் நிகழ்ச்சிகளில் பேசியதுண்டு. கவிதைகளில் கவிஞன் எங்ங்னம் சொற்களைக் கையாளுவானோ அங்ங்னம் இவர் பேச்சில் சொற்களைக் கையாளுவார். இப்படிச் சொற்கள் தாமாக வந்து இவர்தம் பேச்சில் புகுந்து ஏவல் கேட்டு நிற்கும் என்று சொல்லி శā}ళ శ్రీడఢ Tఓ.