பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் & 79 இச்சமயத்தில் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பள்ளையின் வரலாற்றில் படித்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகின்றது. ‘எனைவைத்தி எனை வைத்தி யெனப் பதங்கள் இடையிடை நின்று இரந்து வேண்ட ‘இனிவைப்பாம் இனிவைப்பாம் பொறுத்திடுமின் பொறுத்திடுமின் என்று கூறி நினைவுற்ற ஒருகடிகைக் களவில்கவித் தொடைதொடுத்து நிமலர் பூணப் புனைவுற்ற மீனாட்சி சுந்தர வள் ளலைப் போல்வர் புவியில் Urడి. என்ற பாடல் பிள்ளையவர்களின் நண்பர் இராமசாமி அய்யர் அவருடைய கவிதை இயற்றும் திறனைக் குறித்துப் பாடியது. அகராதியிலுள்ள சொற்கள் எல்லாம் பலவரிசைகளில் நின்று கொண்டு என்னை உங்கள் கவிதையில் வையுங்கள்; என்னை உங்கள் கவிதையில் வையுங்கள் என்று வேண்டி நிற்கின்றனவாம். பிள்ளையவர்கள் அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறி, இனி வைப்போம்; இனி வைப்போம்' என்று சமாதானம் செய்வாராம். திரிசிரபுரத்தைச் சார்ந்த பிள்ளையவர்கள் கவிதையில் வல்லுநர். நம் அண்ணல் விசுவநாதமும் திரிசிரபுரத்தைச் சார்ந்தவரே. இவர் உரைநடைச் செல்வர். இவர் பேசும் போதே அகராதிச் சொற்கள் அவர் ஏற்கெனவே அறிவுறுத்தியவாறு தத்தமக்கு வரையறுக்கப் பெற்ற இடங்களில் புகுந்து கொண்டு அண்ணலாரின் பேச்சை அழகு செய்து பொலிவினை ஊட்டும் என்றும் சொல்லி வைக்கலாம். ஆலைகளில் நூல் இயல்பாக வருவதுபோல் இவர் பேச்சும் ஆற்றொழுக்காக இவர்தம் திருவாயினின்று வெளிவரும். இவர்தம் சொல்வளத்தையும் சொல்லும் வன்மையையும் புலப்படுத்தி நிற்கும். 4.உ.வே.சா. மீனாட்சி கந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (இரண்டாம் பாகம்)-ப.255