பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. சொல்லுக சொல்லைப்பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இண்மை அறிந்து. (545) என்ற வள்ளுவர் பெருமான் குறிப்பிட்டவாறு சொற்கள் இவர் பேச்சில் ஒழுங்கு பெற அமைந்து அப்பேச்சு கேட்டார் பிணிக்கும் தகையவாய் (643) அமைந்து பேசுவோருக்குப் புகழ் ஈட்டித்தரும். இங்ங்ணம்நம்அண்ணல் பேச்சுக்கலையின் கொடுமுடியில் நின்றவர். அவர் மறைந்து விட்டாலும் அவர்தம் திருமுகம் நம் மனக் கண்ணில் நிற்க, அவர்தம் பேச்சு நம் மனக்காதில் ஒலித்துக் கொண்டுள்ளது. தமிழ்ப்பற்று: இளமையில் அவருக்கு உண்டான தமிழ் பற்று சைவச் சான்றோர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைத் தந்தது. இதன் காரணமாக அவர் உள்ளத்தில் தமிழில் நன்றாகப் பேசவும் தெளிவாக எழுதவும் வேண்டும் என்ற உந்தல் (Drive) எழுந்தது. திருவாளர் உ.க. பஞ்சரத்தினம் பிள்ளை என்ற பெரியாரைப் பேச்சுக்கு ஒரு குறிக்கோள் மனிதராகக் கொண்டர். திரிசிரபுரம் சைவப் பேரவையின் மூலமாகப் பேச்சுப் பயிற்சியை முறையாகப் பெற்றார். 'உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்" என்ற வள்ளுவம் அவருக்கு ஞான விளக்காக ஒளிகாட்டிக் கொணடிருந்தது. இது காறும் தம் பேச்சாற்றலை அறைக்குள்ளேயே காட்டிக் கொண்டிருந்த அண்ணல் அம்பலத்தில் ஆற்றலைக் காட்ட வேண்டிய வாய்ப்பினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்: 'பெரியாரைத் துணைக்கோடல்" என்பது அவர்தம் மற்றொரு குறிக்கோள். இந்த அதிகாரத்திலுள்ள அனைத்துக் குறள் மணிகளும் அவர் உள்மனத்தில் இடைவிடாது ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்;இறையருளால் அந்த வாய்ப்பும் தானாக வந்தது. 5. ஆதன் . 595 5.கேது - அத்.45