பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் * 81 கன்னிப்பேச்சு: நெல்லை மாவட்டத்திலுள்ள ஒட்டப் பிடாரம் என்ற சிற்றுரில் (1921) சித்தி விநாயகர் சபை ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு வந்து சேர்ந்தது. பெருங்கவிஞர் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் தலைமையில் 'அன்பு-மனத்தின் வன்மை என்ற பொருள் பற்றிப் பேசும்படி அவையினர்கேட்டுக் கொண்டனர். இதுவே அண்ணல் முதல் முதலாக மேடை ஏறிப் பேசிய பேச்சு. இதே மேடையில் கப்பல் ஒட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனார் போன்ற பெரியோர்களும் பேசினர். பெரும்புலிகளுடன் ஒரு சிங்கக்குட்டி இருக்கும் வாய்ப்பு. விசுவநாதம் தமது 22-வது அகவையில் மிகத் துடிப்புடனும் ஆர்வத்துடனும் பேசிய பேச்சு பெரியார்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர்கள் யாவரும் எதிர்காலத்தில் அடல் ஏறுபோல் பேச்சில் திகழ்வார் என்று வாழ்த்தினர்.' இதன் பிறகு அண்ணலுக்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்து சேர்ந்தன. அவருடைய தியாக வாழ்க்கையும் தொண்டுள்ளமும் அவருக்குப் பலபல பெருமைகளைத் தேடித் தந்தன. இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர், ஆராய்ச்சி, மேடை, வானொலி நிலையம் ஆகிய பன்னிரு துறைகளிலும் அவருடைய பலநூறு பேச்சுகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன. அவற்றுள் சில பிரிவுகளில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பெரும் புகழைத் தேடித் தந்தன என்பதைச்சுருக்கமாகக் காண்போம். சீர்திருத்தத்துறை: சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பவையனைத்தும் நீக்கப்பெற வேண்டும் என்பது பற்றிப் பல இடங்களில் நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். (அ) சாதிவேற்றுமை: சைவம் மற்றும் பழமைக் கருத்துகளில் பெரு நம்பிக்கைக் கொண்ட பெருங்குடும்பத்தில் 7. திருச்சி விசுவநாதம் - பக். 125 டு ெ