பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. தோன்றிய அண்ணல் விசுவநாதம், இளமை முதற் கொண்டே சாதி வேற்றுமையை ஒம்புவதில்லை. பார்ப்பார், பறையர் முதலிய பாகுபாட்டை அடியோடு வெறுத்தவர் அண்ணல் விசுவநாதம். 'சாதி என்ற சொல் தமிழில் உண்டு; தொல்காப்பியத்தில் அது காணப்பெறு கின்றது. ஆயினும் அச்சொல் ஒரிடத்திலாயினும் மக்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கப் பெறவில்லை. அது நீரில் வாழும் உயிர்களையே குறிக்கின்றது." இன்று சாதி என்னும் சொல் பிறப்பிலே வேற்றுமை உண்டு என்பதைக் குறிப்பதாகும். பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கை தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை. தொழில் ஒழுக்கம், கல்வியறிவு திறமை என்ற இவற்றின் காரணமாகவே வகுப்புப் பிரிவுகள் தோன்றின. நாளடைவில் மக்கள் செய்யும் தொழில்களில் சிறுமை பெருமை பாராட்டத் தொடங்கினர். இவையே உயர்வு தாழ்வுகளுக்கு உறைவிடமாயின. வடமொழியிலுள்ள வேத-உபநிடத- சுமிருதிகளும் இவ்வுண்மையையே ஒப்புக் கொள்ளுகின்றன." தமிழ்நாட்டில் குலங்கள் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்தனர் என்ற கொள்கையும் உண்டு. சாதி, குலம் போன்ற் சொற்கள் கிட்டத்தட்ட ஒரு பொருளையே குறிப்பவை. நால்வகைச் சாதிகள் இந்நாட்டினில் நாட்டினர்' என்ற கபிலரகவலைச் சான்றாக்க கொண்டு வேண்டாதார்மீது வீண்பழி சுமத்துவது அறிவுடைமைக்கு உகந்ததன்று. 8.நீர் வாழ் சத்யுன் அறுபிறப்பு உரிய - மரபியல் - நூற். 44. நீர் வாழ் சாதியுள்தத்தும் நாகே' - மேலது. நூற். 64 சாதி - ஜூதி, ஜம் - பிறப்பு. ஜனித்தல். பிறத்தல், ஜன்மம் - பிறப்பு. முதன்முதலில் அறிவியலில் கலைச்சொற்களை உருவாக்கும்போது Hydrogen என்பதற்கு அப்ஜனகம்' என்று மொழி Quuäässui. Hydro-water gen-generated, güu-si.ggðið - opääß. ișāşi இது நீர்வளி என மொழி பெயர்க்கப்பெற்றது. இவையாவும் நடைமுறைக்கு உகந்ததல்ல. பொருளிலிருந்து தோன்றும் போருள்கட்குப் (Derivativcs) பெயரிடும்போது சரிவருவதில்லை. ஆகவே, ஹைட்ரோஜன் என்றே சொற்பெயர்ப்பு செய்து கொள்வது உகந்தது. 9. தொல்காப்பியம் கட்டும் வாழ்க்கை - பக்410 - 411