பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் : 83 இன்றுள்ளதுபோல் அன்றும் சாதிப்பிரிவு பொருளாதார அடிப்படையில் தோன்றியிருக்க வேண்டும். காலப் போக்கில் அது தொடர்பற்று வெவ்வேறு குலமெனக் கருதும் நிலை வந்து விட்டது. ஒவ்வொருவரும் பேதைமையால் குலப்புராணம்’ பாடும் இயல்புடையவராக மாறிவிட்டனர். எனவே, சாதிப்பிரிவிற்கு எந்த ஒருவகுப்பாரும் பொறுப்பல்லர் என்றே தோன்றுகின்றது, எப்படியிருப்பினும் சாதி வேற்றுமையை அடியோடு வெறுத்தார் நம் அண்ணல். தம் சொற்பொழிவு களில் இதனை வெறுத்தே வந்தார். நம் நாட்டில் நடைபெறும் கலகங்களுக்கும் குழப்பங் களுக்கும் சாதிமுறையே பெரிதும் காரணமாக இருந்து வருகின்றது. அண்மையில் பீகார் மாநிலத்திலும் தமிழகத்தில் தென்பகுதியிலும், கோவையிலும் சாதி வேற்றுமைக் கொடுமையால் நேரிட்ட கலகங்களையும் கொலைகளையும் கண்டு சான்றோர்கள் தலை குனிந்தனர். அண்ணல்கூறுவார். 'சமூகம் என்னும் நிலத்தில் சாதி என்னும் விதைபூன்றி, வெறுப்பு என்னும் நீர் பாய்ச்சி வேற்றுமை செடி வளர்த்து, பொறாமை பூத்து, கலகம் காய்த்து, அடிதடி பழுக்க வைக்கின்றோம்' என்று. மேலும் அண்ணல் 'சாதி வேற்றுமை, நாட்டு வேற்றுமையை விட, சமய வேற்றுமையை விட, மொழி வேற்றுமையை விட, நிற வேற்றும்ையை விட, மிகப் பெரிதாக மதிக்கப்பெற்று வருகின்றது' என்று பேசுவார். நகைச்சுவைமிக்க நம் அண்ணல், "தீண்டாமை, கொள்ளாமை, கொடுக்காமை, உண்ணாமை, தின்னாமை, எண்ணாமை, இரங்காமை, பொறாமை முதலிய எத்தனையோ ஆமைகள்சாதி முறைச்சேற்றில் வாழ்கின்றன. இந்த ஆமைகள் யாவும் உணராமைக் கிணற்றிலுள்ள அறியாமையின் குட்டிகள் ஆகும்' என்று பல ஆமைகளைக் குறிப்பிட்டுச் சாதியால் ஏற்படும் வேற்றுமைகளைப் போக்க வேண்டும் என்பார். பாவேந்தர் 'ஆமை' என்ற சொல்லை வைத்துக் கொண்டு ஒரு கவிதையில் விளையாடுவதை இச்சமயத்தில் நினைவு கூர்ந்து மகிழ்கின்றோம்.