பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் : 85 காக்கைக்கு உணவூட்டி வருகின்றார். இதை இவர் நகைச் சுவையாக 'காக்கைக் குன்றம்’ என்று வழங்குவார். மேற்கொண்ட பணியைத் தொடர்ந்து செய்து, பழக்கத்தால் எதுவும் குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ள வரும் என்ற உண்மையை நாடறியச் செய்து வந்த நாநயம் படைத்த வித்தகர் இவர். இதனை உளவியலார் ஆக்கநிலை மறிவினை (Condi tioned reflex) grains oupsi(5.6.1#. &#post (learning) gogo or ஒரு வழியாகவும் கொள்வர். பாவ்லோவ் (Pavlov) என்ற இரஷ்ய அறிஞரும் வாட்சன் (Watson) என்ற அமெரிக்க அறிஞரும் கற்றல் அனைத்தும் மறிவினைச் செயல்களே (Reflex action) என்றனர். நாயின் வாயில் உணவு சேர்ந்தவுடன் உமிழ் நீர் ஊறுதல் இயற்கை மறிவினையாகும். உணவிடும் போதெல்லாம் ஒரு மணியோசையை எழுப்பி வந்தால் உணவிடுதலும் மணியோசையும் இயைபு பெற்று தூண்டலின் துலங்கலாகி (stimulus-response) விடுகின்றது. உணவின்றி மணியோசையை எழுப்பினாலும் நாயின் வாயில் உமிழ்நீர் ஊறுகின்றது. இதையே கற்றலின் மறிவினை அல்லது ஆக்கநிலை மறிவினை என்பர் உளவியலர்."இதுவே கழுகு களுக்கும் காக்கைகளுக்கும் பொருந்தும். (2) 'மேல்நாட்டில் பெண்கள் விண்விமானிகளாக இவ் உலகத்தை வலம் வருகின்றனர். நம்நாட்டுப் பெண்களும் அவர்கட்குச் சளைத்தவர்கள் அல்லர். எதில்? அரசமரத்தைச் சுற்றுவதில்' (சுற்றியவுடன் அடி வயிற்றைத் தடவிப் பார்ப்பர் சூல் கொண்டுவிட்டோமோ என்று பார்க்க) இவ்வாறு சிரிக்கச் சிரிக்கப் பேசி அறியாமையைப் போக்குவர். (3) பார்ப்பனர்கட்குத்தான் நாட்டுப்பற்று உண்டு: மற்றவர்கட்கு அஃது இல்லை என்று கூறுவது பெரும் பிழையாகும் என்று கூறிய அண்ணல் மேலும், 'இந்திய 10. கல்வி உளவியல் கோட்பாடுகள் - பக் 209