பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. வரலாற்றையே எடுத்துப் பாருங்கள். எத்தனையோ முறை படையெடுத்து வந்தவர்களை எல்லாம் கைலாகு கொடுத்து வரவேற்று அவர்கட்கு இந்நாட்டைக் காட்டிக் கொடுத்த வஞ்சகர்க்கும் தேசபக்திக்கும் உள்ள சம்பந்தம் ஏகாதசிக்கும் இன்னாசிமுத்துவுக்கும் உள்ள சம்பந்தமாக இருக்கும். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் உள்ள சம்பந்தமாக இருக்கும்' என்று ஒருமுறை விளாசி காட்டியது இவர்தம் சொல்லாற்றலை விளக்கும். (4) அரசியல் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரைக் குழம்பிற்குக் கறிவேப்பிலையைப் பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிந்து விடுகின்றனர் என்று ஒர் எடுத்துக்காட்டால் விளக்கியது இவர்தம் நா நயத்திற்குச் சான்றாக நிற்கும். (5) இந்தி எதிர்ப்புப் போராட்டக்காலங்களில் இராஜாஜி தமது பேச்சுக்களில் அத்தைப் பாட்டிக் குட்டிக்கதைகளையும் எளிய எடுத்துக்காட்டுகளையும் கூறி மக்களை மயக்குவ துண்டு. இவற்றை நம் அண்ணல் அவர்மீதே திருப்பிவிட்டு அவர் வாயை அடக்குவது விசித்திரமானது. (அ) ஒரு சமயம் இந்தியின் இன்றியமையை வற்புறுத்த இராஜாஜி தமிழ் இட்லி போன்றது; அதற்கு இன்றியமையாத சட்னி போன்றது. இந்தி’ என்று குறிப்பிட்டுப் பொது மக்களை ஏமாற்றப் பார்த்தார். நம் அண்ணல் உடனே சொன்னார்: 'இராஜாஜி தமிழை இட்லிக்கு ஒப்பிட்டதை அப்படியே ஒப்புக் கொள்வோம். வெறும் இட்லியை சட்னி இல்லாமல் உண்ண முடியும். இட்லி இல்லாமல் சட்னியை உண்ண முடியாது. ஆகவே, தமிழே சரியாகத் தெரியாதவர்கட்குத் தமிழ்தான் முதலில் கற்றுக் கொடுக்கப் பெறுதல் வேண்டும்; அதை விட்டுவிட்டு இட்லி இல்லாத வெறும் சட்னியை (இந்தியை) கொண்டு வருவதில் பயன் ஏதும் இல்லை" என்று பதில் கொடுத்து இராஜாஜியின் உவமையை உருக்குலைத்து உதறினார். (ஆ) பிறிதொரு சமயம் அமைச்சர் இராஜாஜி தமிழ் வேட்டி போன்றது; இந்தி சட்டை போன்றது” என்று உவமை கூறி இந்தியின் இன்றியமையாமையை வற்புறுத்தினார்.