பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் * 37 உடனே அண்ணல், 'தமிழ் வேட்டி போன்று மிகவும் இன்றியமையாததுதான். அதை அவர்கள் வைத்துக் காப்பாற்றி னாலே அஃது அவர்களது மானத்தைக் காப்பாற்றும். அதை விட்டு, அவர்கள் இந்தி எனும் சொக்காயை மட்டும் அணிந்து தமிழ் வேட்டி இல்லாமல் இருப்பார்களேயானால் அதைவிட அவமானம் வேறு ஒன்றும் இல்லை' என்று சாணக்கியரையும் வெல்லும் சாணக்கிய முறையில் பதில் கூறி வாயடைத்து அந்த உவமையையும் சிதறடித்தார். இவற்றால் அண்ணலின் பேச்சுதிறமையை நன்கு அறியலாம். சாதுர்யமாகப் பேசும் போக்கையும் உணரலாம். இங்ங்னம் தந்தை பெரியாருக்குத் தோள் கொடுத்து தன் மான இயக்கத்தைப் பரப்புவதற்கு ஒல்லும் வகையெல்லாம் உதவிய அன்பருள் அண்ணல் விசுவநாதம் குறிப்பிடத்தக்கவர். தந்தை பெரியாருடனும் தனியாகவும் தமிழகம் முழுவதும் வலம் வந்து தன்மானக் கருத்துகள் மக்கள் மனத்தில் ஊன்றும் வண்ணம் நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகள் செய்து வந்ததை தமிழகம் போற்றி வருகின்றது. அவர்தம் வேடிக்கை யான குட்டிக்கதைகளும் காரணகாரியத் தொடர்புடன் விளக்கும் முறைகளும், நகைச்சுவைப் பாணியும் மக்கள் உள் மனத்தில் நெடு நாட்களாகப் படிந்து கிடந்த குருட்டு நம்பிக்கைகளும் மூட பழக்கவழக்கங்களும் படிப்படியாக மறைந்து வரலாயின. அண்ணல் விசுவநாதத்தின் சொற்பொழிவுகளால் தமிழிலேயே அறிஞர்களைக் கொண்டு தமிழிலேயே திருமணம் ச்ெய்து கொள்ளும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. தொண்டு கிழங்கள் பொருந்தாமணம் செய்து கொள்வது அடாதது என்ற உணர்ச்சி பரவியது. கைம்பெண்கள் மனம் செய்து கொள்வது வழக்கிற்கு வந்தது; எண்ணற்ற கைம்மை மணங்கள் நடைபெறலாயின. சாதிப் பிரிவுகளும் கொடுமைகளும் ஒழிய வேண்டும் என்ற நல்லுணர்வு பட்டி தொட்டியெல்லாம் பரவிக் கொள்ளத் தொடங்கியது. பகுத்தறிவு ஒளி தமிழ் நாடெங்கும் வீசத் தொடங்கியது. சாதிக்