பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் & 93 முத்தமிழ்க் காவலர் அவர்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர் என்று தமிழகம் முழுவதும் அறியச் செய்தது. தமிழகம் முழுவதும் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பம்பரம்போல் சுற்றிச் சுழன்று 100க்கும் மேற்பட்ட கிளைச் சங்கங்களை நிறுவி ஆங்காங்கே சொற்பொழிவுகள் செய்து வந்தார். இந்தி எதிர்ப்பு பிரசாரத்தின் போது மட்டும் 314 ஊர்களில் 430 நாள்களில் 617 சொற்பொழிவுகளை நிகழ்த்தி யுள்ளார். இது முத்தமிழ்க் காவலரின் மாபெருந் தொண்டு அல்லவா? தூத்துக்குடியில் மட்டிலும் ஒரே நாளில் ஏழு பொழிவுகள் ஏழிடங்களில் நிகழ்த்திய பெருமை இவருக்கு உண்டு. நல்ல உடல்நிலையையுடைய இப்பெரு மகனாருக்கு தமிழ்ப் பற்றும் இந்தியை ஒழிக்க வேண்டுமென்ற பேரார்வ மும் அவருக்கு வேண்டிய ஆற்றலை நல்கின. 4. தியாக மூர்த்திகள்: சென்னையில் இராஜாஜியின் இல்லத்தின் முன்பு மறியலும் இந்து தியாலாஜிகல் பள்ளி முன்பு இந்தி எதிர்ப்புப் பிரசாரமும்செய்யப்புற்றீசல்கள்போல் தமிழர்கிளம்பினர். இவற்றில் கைதாகிச்சிறை சென்றவர்களின் தொகை தலைவர் பெரியார், சர்வாதிகள், தொண்டர்கள் உட்பட மொத்தம் 1271. இவர்களில் ஆண்கள் 1166, பெண்கள் 73. இவர்களுடன் சென்ற குழந்தைகள் 32. இந்நிலையில் கி.ஆ.பெ.வி அவர்கள் பல ஊர்கள் சுற்றுப்பயணம் செய்து உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளாற்றி இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற ஆக்க வேலைகள் செய்து வந்தார். மறைமலையடிகளால் முதன் முதலாக எழுப்பப் பெற்ற 'தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை முழக்கத்துடன் தமிழ்க் கொடி ஏந்திச் சிறைசென்ற தானமுத்துவும் நடராசனும் தம் இன்னுயிரைக் களபலியாகக் கொடுத்தனர். இதனால் அறப் போராட்டம் முற்றிலும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியது. 5. அரசியலில் மாற்றம்: 31-12-1939இல் காஞ்சிப் பாசறையில் இந்தி எதிர்ப்பு வலுவடைந்தது. இரண்டாம்