பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பாடமாக்குவதை வன்மையாகக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்றன. (ஆ) இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பாசறை அமைக்கப்பெற்றதும் கொடிமரம் நாட்டப்பெற்றதும் திருச்சியில்தான். (இ) இந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு தமிழன் தொடுத்த போர் என்னும் நூல் வெளிவந்ததற்குக் காரணமாக இருந்தது திருச்சியே. (ஈ) திரும்பிப் பார் திருச்சியை’ என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா மூலம் விடுதலையில் ஒரு தலையங்கம் பிறந்து தமிழ்ப் பகைவரை எச்சரித்தது. 2. தமிழர் பெரும்படை: 1938 ஆகஸ்டு முதல் நாளன்று தமிழர் படை ஒன்று அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் தலைமையில் திருச்சி மாவட்டத்தைக் கடந்து செங்கற்பட்டு மாவட்டத்தைத் தாண்டி செப்டம்பர் 11இல் (42 நாட்களில்) 577 மைல்கள் கால்நடையாகச் சென்னை வந்தடைந்தது. இதற்கும் முதலமைச்சர் அசைந்தார் இலர். 21-4-1938-ம் நாள்.ஆணைப்படிதமிழகத்தில் 60, ஆந்திரத்தில்54, கன்னட நாட்டில் 4, கேரளத்தில் 7 ஆக 125 பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் பயிலும் மாணவர்கள்மீது இந்தி திணிக்கப் பெற்றது. இந்த அடாத ஆணையைக் கண்டு கல்வி நிபுணர்கள் பேராசிரியர்கள், நடுநிலையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் கண்டனக் குரல்கள் எழுப்பினர். இதற்கும் இராஜாஜி அடங்கினாரிலர். 3. சென்னை மாநில இந்தி எதிர்ப்பு உரிமை ஆணையம்: (The Anti-Hindi High Command): @Jól, sugmað sílgyoorth sorps நிறுவப்பெற்றது. இதில் தமிழ்ப் புலவர்கள், தன்மான இயக்கத்தினர், நீதிக்கட்சியினர், துறவிகள் (மடாதிபதிகள்) ஆகியோர் அடங்குவர். இதன் தலைவர் திரு.ச.சோமசுந்தர பாரதியார், செயலர் கி.ஆ.பெ.வி. இதன் செயற்பாட்டால்