பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப்போராட்டவீரர் * 91 திட்டமிட்டதேயாகும். வடநாட்டுக் காங்கிரசுக்காரர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே 'முதற்கோணலில் இறங்கி னார்கள். முதற்கோணல் முற்றும் கோணலாகும் என்று அவர்கள் குறைமதிக்கு எட்டவில்லை. - எவரேனும் தமிழ்மொழிக்கு ஊறு செய்யத் துணிந்தால் தமிழர்கள் அதனைப் பொறுத்துக் கொள்ளார். 'தமிழை இகழ்ந்தவரை எம் தாய் தடுத்தபோதிலும் விடோம்” என்ற சூளுரையை மேற்கொள்ளத் தயங்கார். இந்த அழியா உணர்ச்சி வெள்ளத்தை முதலமைச்சராகப் பதவியிலிருந்த இராஜாஜி இந்தியைக் கட்டாய பாடமாக்கத் திட்டமிட்டபோது தமிழகம் முழுவதும் கிளர்ந்தெழுந்தது. தங்களிடையே இருந்த சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, கட்சி வேற்றுமை இவற்றை மறந்து தமிழைப் பாதுகாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 1. தமிழ் மாநாடு: இதனைச் சரியாக நடத்தத் திருச்சி விசவநாதம் மேற்கொண்ட அரும்பாடுபாட்டைப் பொன் னெழுத்துகளால்தான் பொறிக்க வேண்டும். சென்னை மாநிலத் தமிழ்ர் மாநாடு 26-12-1937இல் கூடியது. கி.ஆ.ப்ெ. விசுவநாதம் செயலராகச் செயற்பட்டார். சென்னை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், மும்பை, பர்மா, பிநாங்கு, இலங்கை முதலிய இடங்களிலிருந்தும் தமிழர்கள் திரண்டு வந்திருந்தனர். பசுமலை பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் மாநாட்டுத் தலைமை ஏற்று மிகச் சிறப்பாக நடத்தித் தந்தார். இம்மாநாட்டில், (அ) தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்படவேண்டும் என்றும், தமிழ் வளர்ச்சிக்காகத்தனியாக ஒரு பல்கலைக்கழகம் நிறுவப் பெற வேண்டும் என்றும், இந்தியைக் கட்டாய STmmmT TTT TTTT TTlllLL TTmmmTT LSLTT TTTmm mmTTS TTTTTTS TTTT கண்டு மகிழ்த்தவன். 2. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சர் ஆட்சியில் தஞ்சையில் இது அமைக்கப்பெந்தது இது தவிர கோவையில் பாதியார் பெயரால் ஒரு பல்கலைக்கழகமும் திருக்கில்ே பணிதாகக் பெயரால் ஒரு பல்கலைக்கழகமும் தொடங்கப் பெற்றன.