பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர் அண்ணல் விசுவநாதத்திற்குத் தமிழ் மொழியின்மீது அடங்காக் காதல் உண்டு. எந்த வழியிலாயினும் அதற்கு ஊறு விளையும் அறிகுறிகள் தென்பட்டாலும் அண்ணல் வீறு கொண்டு எழுவார். இந்தித் திணிப்பு தமிழுக்குக் கேடு விளைவிக்கும் என்பதை நீள நினைந்து பார்த்தவர் திருச்சி தந்த செம்மல் விசுவநாதம். திருச்சிக்குப் பெருமை: தமிழ் என்றால் மதுரை நினைவுக்கு வரும். காரணம், தமிழை வளர்த்த சங்கங்கள் இருந்தமையால்; கவியரங்கேறிய அரசர்கள் செங்கோ லோச்சியதால். இவை போன்றவற்றால், பலர் செய்த சாதனையால், மதுரைக்குப் புகழ் வந்தது. திருச்சிக்குப் பெருமை வந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதன்முதலாகத் தொடங்கப் பெற்றதால்;. அதுவும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முன்னின்று தொடங்கியதால். தமிழுக்கு ஆபத்து என்ற குறிப்பு தெரிந்தாலே முதன்முதலாகச் சீறி எழுபவர் முத்தமிழ்க் காவலரே. இந்தியைக் கட்டாய பாடமாகத் திணிக்க அரசு முயன்றபோது அதன்னத் தகர்த்தெறியும் போராட்டம் மூன்று கட்டங்களில் நடைபெற்றதாகக் கருதலாம். 1937-இல் காங்கிரசு முதன்முறையாக அரசாங்கத்தை ஏற்று நடத்த முன்வந்ததும், இந்தியைக் கட்டாய பாடமாக்கத்