பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் * 95 இரண்டாவது கட்டம் பெரியாரும் தளபதி அண்ணாவும் சிறையிலிருந்தபோது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வைத்த பெருமை தோழர் பாண்டியனுக்கும் அண்ணல் கி.ஆ.பெ. விக்குமே உண்டு. நினைவில் உள்ள பொழிவுகள்: கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் இரண்டு விதமான பொழிவுகள் நடை பெற்றன. சுய மரியாதை உலகிற்குக் கிடைத்த இரண்டு காளைகளில் ஒன்று அண்ணல் விசுவநாதம்; மற்றொன்று அறிஞர் அண்ணா. இந்த இரண்டு காளைகளையும் தந்தை பெரியார் தமது இரண்டு செல்லப் பிள்ளைகளாகக் கருதி மகிழ்ந்தார். பெரியார் சிறைபுகுந்த அன்று சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் அண்ணல் பேசின பேச்சு கேட்டோர் அனைவரையும் கண்கலங்க வைத்தது. (1) அறிஞர் அண்ணாவின் பேச்சு கங்கையாற்று வெள்ளம் போல் பேராவேசத்துடன் மக்களை அடைந்தது. (2) முத்தமிழ்க் காவலரின் பேச்சு யமுனையாற்றின் பெருக்கு போல் நிதானமாக நடைபெற்று வந்தது. இந்த இருவேறு சொற்பொழிவுகளும் மக்களுக்கு மாறி மாறிக் கிடைத்து வந்தன; தமிழுணர்ச்சியும் தமிழ்ப்பற்றும் அவர்களிடையே கிளர்ந்தெழுந்தன. இந்தித் திணிப்புக்கு ஏற்பட்ட பலத்த எதிர்ப்பின் நாடியறிந்த வெள்ளையர் ஆட்சி 21-2-1940இல் கட்டாய இந்தித் திட்டத்தைக் கை நழுவி விட்டுவிட்டது. நாட்டு விடுதலைக்குப்பின்: காங்கிரசு அமைச்சரவை சென்னை மாநிலத்தில் ஏற்பட்டதும் கல்வி முறைபற்றிய ஆராய நிறுவப்பெற்ற நிபுணர்குழு 'இந்திப் படிப்பைக் கட்டாயமாக்கக் கூடாது' என்ற பரிந்துரையையும் புறக்கணித்து செயற்படத் தொடங்கியது. ‘புல்டோசர் போல், -ஓமந்துர் இராமாரெட்டியாரின் அமைச்சரவை 20-6-1948இல் இந்தித் திணிப்புபற்றிய அரசாணையைப் பிறப்பித்தது.