பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பதுங்கியிருந்த புலி பத்தாண்டுக்குப் பிறகு மறுபடியும் பாயத் தொடங்கியது. இதன் விளைவுகள்.' (1) 17-4-1948அன்று சென்னை புனித மேரி மண்டபத்தில் இந்தி எதிர்ப்பாளர் மாநாடு நடைபெற்றது. மறைமலையடிகள் மாநாட்டுத் தலைவர். இவர்தான் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அதனைத் தொடங்கி வைத்துத் தலைமை பூண்டனர். அதில் ஒதுங்கி நின்ற திரு.வி.க. ம.பொ.சி., தாரண துரைக் கண்ணன், டி. செங்கல்வராயன் போன்றோர் இதில் பங்கு கொண்டனர்; அரசை வன்மையாகக் கண்டித்தனர். தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அருணகிரி அடிகள் ஆகியோர் மீண்டும் அறப் போராட்டம் தொடங்க வேண்டும் என்று அறைகூவல் விட்டனர். (2) இதன் விளைவாக 15-9-1948 முதல் நாடு முழுவதும் 300க்கு மேற்பட்ட ஊர்களிலுள்ள பள்ளிகள் முன்பு தொண்டர்கள் மறியல் போரை 100 நாட்கள் வரை தொடர்ந்து நடத்தினர். 14தடையுத்தரவுகள் மீறினர். நான்தலைமையாசிரி யனாக இருந்த பள்ளி முன்பும் இம்மறியல் போராட்டம் நடை பெற்றது. நான் தடுத்து நிறுத்தவில்லை. ஏன் தெரியுமா? பள்ளியில் இந்தி கற்பிக்கவில்லை. தவிர, ஆசிரியராக இருக்கும்வரை அரசியலில் பங்குகொள்ளலாகாது என்ற கொள்கையுடையவன். இதனால் பல்வேறு மொட்டைக் கடிதங்கள் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பப் பெற்றன. மறுமொழி கேட்டு அவை எனக்கு வந்தன. நான் "மறியலை நான் நடத்தவில்லை; தூண்டவும் இல்லை. பள்ளியிலும் இந்திக் கற்பிக்கவும் இல்லை. இதனைத் தடுத்து நிறுத்துவது காவலர் பணி' என்று மறுமொழி தந்து வாளா இருந்து விட்டேன். சட்டத்தின்படி நடப்பவனாதலால் எந்த அதிகாரத்துக்கும் பணிய வேண்டியதில்லை. இதனைப் பெரியார் எனக்கு 1944இல் தந்த அறிவுரை. (3) இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டமும் அதனால் ஏற்பட்ட கிளர்ச்சியும் 1949இல் வெற்றியைத் தந்தன. 3. அப்படி இருந்தாலும்தானும் ஒருதமிழன்.தலைமை ஆகியங்களில் முதன்முதலாக'வித்துவன் பட்டம்பேத்தவன். உணக்கி இருந்தது. காட்டிக்கோள்ளவில்லை.