பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் & 97 கல்வி அமைச்சராக இருந்த திரு தி.சு. அவினாசிலிங்கம் தம் பதவியைத் துறந்தார். கட்டாய இந்தி திட்டமும் கைவிடப் பெற்றது. தமிழ் மக்கள் திரும்பவும் அமைதி பெற்றனர். ன்றாவது கட்டம் இந்தக் கட்டத்தில் இந்தித் திணிப்புத் திட்டம் பல்வேறு மாற்றங்களை அடைந்தது. (1) இந்தியில் மாற்றங்கள்: பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்துஸ்தானி என்ற கலப்பு மொழி பயன்படும் என்று காந்தியடிகள் கருதினார். ஆனால் அவர் காலத்திற்குள் இந்தியாவிலுள்ள உருது பாரசீகச் சொற்கள் அகற்றப்பெற்றும், தூய வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் கொண்ட இந்தி'யாகவும் உருமாற்றம் செய்யப்பெற்றும் இந்தி வெறியர்கள் நயா இந்துஸ்தானி என்ற புதிய பெயர் இட்டனர். கி.ஆ.பெ.வி. மொழியில் கூறினால் சமஸ்கிருதத்தின் வாலறுக்கப் பெற்ற நரிதான் என்பது. விளைவுகள்: (அ) ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமையைப் பெருக்கியது. மொழிப் பிணக்குகளை ஏற்படுத்தியது. இந்தப் புதிய மொழியின் தனித் தகுதியாவன: (i) இந்திய மக்களின் தொகை என்றால் இந்தி பேசுவோரின் தொகை 13.3 கோடி. (ii) இவர்கள் ஒரே வகையான இந்தியைப் பேசுபவர்கள் அல்லர்; இந்தியில் 96 வகைகளுக்கு மேல் உள்ளன. (i) இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று மாற்றமும் முரண்பாடுகளும் கொண்டவை, ஒரு பகுதியினர் பேசும் இந்தி பிறிதொரு பகுதியினருக்குப் புரிவதில்லை. (iv) பிகாரி, மைதிலி, அவதி, மானக சந்திஷ், கர்கி, போஜ்புரி, மேல் இந்தி, கீழ் இந்தி, கரிபோகி எனப் பல பிரிவுகள் இந்தியில் உண்டு.