பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

முத்தமிழ் மதுரை


கட்டியிருக்கும் வையைப் பெண்ணாளின் இடையினைப் போலத் தோற்றுகின்றது.

அடிப்பக்கம் அகன்றும், மேற்பக்கம் குவிந்தும், மலர் செறிந்தும் விளங்கிய ஆற்றிடைக் குறைகள், வையைப் பெண்ணாளின் பொலிவுடைய மார்பகங்களைப் போலக் காணப்பட்டன.

கரையிடத்தே நின்ற முருக்க மரங்களினின்றும் வீழ்ந்துள்ள சிவந்த பூவிதழ்கள், அவள் வாயிதழ்களைப் போன்று செவ்விதாக இருந்தன. அருவியோடு வந்து கொண்டிருந்த முல்லை மலர்கள், அவளுடைய பல்வரிசையைப் போன்றிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்த கயல்மீன்கள், அவளுடைய பிறழ்கின்ற தெடுங் கண்களைப் போலத் தோன்றின. மணமலர் நீங்காத வரியுடைய கருமணல், மலர்சூடிய அவளின் கூந்தலைப் போன்றிருந்தது.

உலகினைக் காத்து உணவு தந்து உதவும் பெரிய கொள்கையினை உடையவள்; புலவர் நாவிலே பொருந்தியிருக்கும் பூங்கொடியானவள்; புலவர் நாவிலே பொருந்தியிருக்கும் பூங்கொடியானவள்; வையை என்னும் வளம்பொய்யாத பாண்டியரின் குலக்கொடி. அவளே, அங்ஙனம் மிக்க பொலிவுடன் விளங்கினாள்.

கண்ணகிக்கு மேல்வரும் துயரத்தினை அவள் முன்னரே அறிந்தனள் போலும்! அதனால் புண்ணிய நறுமலர் என்னும் ஆடையினாலே தன் மேனிமுழுவதும் போர்த்துக் கொண்டவளாகத் தன் கண்களிலே நிறைந்த கண்ணீர்ப் பெருக்கைக் கண்ணகிக்குக் காட்டாதபடி மறைத்தவளாக, அடக்கிக் கொண்டும் விளங்கினாள்.

கண்ணகிக்கு மேல்வரும் துயரத்தினை அவள் முன்னரே அறிந்தனள் போலும்! அதனால் புண்ணிய நறுமலர் என்னும் ஆடையினாலே தன் மேனிமுழுவதும் போர்த்துக் கொண்டவளாகத் தன் கண்களிலே நிறைந்த கண்ணீர்ப் பெருக்கைக் கண்ணகிக்குக் காட்டாதபடி மறைத்தவளாக, அடக்கிக் கொண்டும் விளங்கினாள். (சிலம்பு 11.11- 173)

ஓடங்களிற் பலவிதம்

‘நீரோடும் ஆறு இதுவன்று; இது மலர் வெள்ளம் ஓடுகின்ற ஆறு’ என்று கூறித் தொழுதனர் அவர்கள். குதிரை முகப்பினையுடையவும், யானை முகத்தை உடையவும், சிங்க