பக்கம்:முத்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

கஞ்சாக் கனவு அது. பூலோக மக்களுக்குச் சரிப்படக்கூடிய போதனையல்ல!' என்று.

'போங்களடி! உங்களுக்கு அடக்கமும் அறிவும் இருந்தால்தானே. வெறும் ஜடங்கள் நீங்கள். உலகச் சாக்கடையில் நெளிவதில் இன்பம் காணும் உயிர்க்கிருமிகள்' என்று பத்மா சீறினாள்.

புஷ்பா சும்மா போவாளா! 'அம்மா புனிதவதி! பிளாட்டோவின் பிரதம சீடையே....அடி தேவகி, சீடனுக்குப் பெண்பால் என்னடி? சீடையோ? சீடியோ? ஒரு எழவும் தெரியலையம்மா எனக்கு நான் ஜடம்தானே. போகுது. பத்மாதேவி! இந்தப் பூலோகத்திலே-பிரசங்கிகள் சொல்வது மாதிரி - பூலோகக் குட்டையில் ஊறிய மட்டைகளான அடியேங்களுக்கு ஞான ஒளிகாட்டி, நல்வழி வகுத்து அருள் புரிய வேண்டும். எங்களுக்கும் தெய்வீக விவகாரங்களுக்கும் ரொம்ப தூரம். காதல் என்றால் நாவல், சினிமாக்களில் வரும் காதல்தான் புரியும். சந்திரனும் குளிர்காற்றும் பூ வாசனையும் நிறைந்த காதல்............'

மற்றப் பெண்கள் எல்லோரும் 'சிரியோ சிரி' என்று சிரித்தார்கள் பத்மா தயங்கவில்லை.

'என்னால் முடியும், நான் வாழ்ந்து காட்டுகிறேன், பாருங்கள்' என்றாள்,

'ஓ!' என்றனர் சிலர்.

'நீ வெற்றி பெற்று விட்டால், பத்மாவுக்கு ஜே என்று கோஷமிட்டு, கொடிகட்டிக்கொண்டு கிளம்பிவிட மாட்டேனா உன் லட்சியக் கொள்கைகளை ஊரெங்கும் பரப்ப' என்று சொன்னாள் புஷ்பா.

ஒடுங்க முயன்று கொண்டிருந்த கொண்டிருந்த சிரிப்பு மறுபடியும் கனத்து ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/13&oldid=1412419" இலிருந்து மீள்விக்கப்பட்டது