பக்கம்:முத்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


டோரில் காலேஜ் தொடங்கலாம் என்று சிபாரிசு செய்தார்கள் சிலர்.

'ஷெல்லி பாட்டையே திருத்திவிட வேண்டியது தான். வானம் கடலை முத்தமிடுகிறதாம்! ஒளி பெரு வெளியை முத்துகிறதாம். அது இதை முத்தி மிடுது, இது அதை முத்த மிடுது. எது எதையெல்லாமோ முத்தமிடுது. நான் ஏனடி உன்னை முத்த மிடக் கூடாது? இப்படி என்ன எழவோ பாடி விருக்கிறானே. திருத்து அதை. உடனே திருத்து!' என்று உத்திரவிட்டார் ஒரு ஜாலி பிரதர். 'திருத்தாமல் போனால் பத்மா அம்மையார் பதறப் போகிறார்கள். பாயப் போகிறார்கள்!'

வெள்ளி முழு நிலவை கண்ணம்மா !

துள்ளும் கடல் அலைகள் கண்டு மகிழலையோ?

வெள்ளைப் பனி வரையும் கண்ணம்மா !

வியன் வானைப் பார்க்கலையோ? பார்த்து நிற்கலையோ?

மின்னும் ஒளிதானும் கண்ணம்மா !

வன்ன வில் வளைவை கண்டு நிற்கலையோ ?

வண்ணப் பூக்க ளெலாம் கண்ணம்மா!

என்னத்தை முத்தமிடும்? தனியாய் திகழலையோ?


அபிநவக் கவி நீண்டகுரலில் பாடத் தொடங்கினார். ஜாலி பிரதர்_அவர் மண்டையில் தட்டி 'ஏய்! நிறுத்து ! இந்தமாதிரிப் பாட்டு நமக்கு சரிப்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/15&oldid=1496055" இலிருந்து மீள்விக்கப்பட்டது