பக்கம்:முத்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

"அது தான் தெரிகிறதே, நீங்கள், என்னை அழைத்து மதிப்பும் கெளரவமும் அளிப்பதிலிருந்து, இது நான் எதிர்பாராதது. ஒருநாள் இப்படித் திடீரென்று நீங்கள் என்னை அதிதியாக்கி உபசரிப்பீர்கள் என்று நான் போன வாரம் வரை எண்ணியிருக்க முடியாது. நினைத்தாலும் நடக்கும் என நம்பக் கூடிய காரியமா என்ன எல்லாம் அதிசயங்களாகவே உள்ளன" என்று சிரித்தான்.

"இதிலென்ன அதிசயமிருக்கு! ஒரேமாதிரி எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் கொண்ட இருவர் ஒருவர் நட்பை ஒருவர் கோருவது அதிசயமா என்ன?"என்று கேட்டாள்

'இல்லை தான்'

" நீங்கள் சமயம் கிடைத்த போதெல்லாம் இங்கு வர வேண்டும். நமக்கும் நமது இலட்சியங்களுக்கும் நல்லதாக அமையும் நமது நட்பு. இல்லையா? "என்று ஆர்வமாகக் கேட்டாள் பத்மா.

ஆமாம்'

"அப்படியானால் நீங்கள் அவசியம் வருவீர்களல்லவா? கட்டாயம் வாருங்கள்’ என்று, அவன் வரவேண்டும் என்ற ஆசையை சொல்லிலும் பார்வையிலும் குழைத்து, உபசரித்தாள். அவனும் அவளை ஏமாற்ற விரும்பவில்லை.

அநேகமாக அடுத்த வாரம் தாத்தா வந்து விடுவார். உங்களைப் பார்க்கவும் உங்களுடன் பழகவும் அவர் ரொம்ப சந்தோஷப் படுவார் என்று உற்சாகமாக மொழிந்தாள் அவள்.

'அவசியம் வருகிறேன்' என்றான் அவன்.

அதற்காக நீங்கள் அடுத்த வாரம் தான் வரவேணும் என்றில்லை'

பத்மா சிரித்தாள். ரகுராமனும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுப் பிரிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/34&oldid=1496641" இலிருந்து மீள்விக்கப்பட்டது