உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[25] தகுதியுடையோரைத்தான் - தார்புனை யும் மன்னனாய் வேட மணியச் செய்வாய் நீ! வேடமணியவே, நீவேந்தனுக்குத் தகுதி பார்ப்பாய்! ஆனால் இந்த உலகம், அறிவு சூன்யங்களை ஆணவ மிலாறுகளை அரசு கட்டிலில் ஏற்றி அழகு பார்க்கிறது! எப்படி நீயும் உலகமும் ஒன்றாக முடியும். ஆனால்-நாடக மேடையே! ஒரு விஷயத் தில் நீயும் உலகமும் ஒன்றுதான்! கற்பனை வளமற்றவனெல்லாம் கவி ஞனாக வேடம் கட்ட நீ உரிமை அளிக் கிறாய். தற்கால உலகமும் அந்த உரிமை யைத் தாராளமாக அளிக்கிறது, சிலருக்கு! ஆகையால் நீயும் உலகமும் ஒன்றுதான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/26&oldid=1706701" இலிருந்து மீள்விக்கப்பட்டது