உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[28] பெண்: ஆமாம் - இந்த அறையில் என் னைத் தவிர உமக்கு இன்பமான பொருள் எது துரையே!- வாரும், சினங் கொண்ட பாம்புகள் போலப் பின்னிக் கொள்வோம்.... ஏன் தயக்கம்? ஆண்: ....பேசாதே! பெண்: கனியே வருகிறது சுவைத்திட மறுக்கிறீர். மலரே வருகிறது நுகர்ந் திடேன் என்கிறீர். இன்பமே வரு கிறது - எட்டிநில் என்கிறீர், நீர் அதிசயமான கிள்ளை - புதுமையான வண்டு -விசித்திரமான மனிதர். ஆண்: இப்போது நீ என்னதான் சொல் லுகிறாய்- - பெண் : எதைச் சொன்னால் நீர் ஆசை யோடு கேட்பீர் ?........ சங்கீத மொழி பேசும் உம் குழந்தைச் செல்வங்கள், "அப்பா எப்பவரும் ஆத்தா? என்று உமது தாயாரிடம் சிணுங்கி அழுவார் களே; அதைச் சொல்லவா? ஆண்: அய்யோ 1 போதும் நிறுத்து! பெண் : தலையணையைக் கண்ணீரால் குளிப்பாட்டும் உம் மனைவியின் நிலை யைச் சொல்லவா ? அதைக் கேட் பீரா??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/29&oldid=1706704" இலிருந்து மீள்விக்கப்பட்டது