பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6

நான் பெரிய மேதாவியோ, பேரறிஞனே அல்ல. சாதாரணமானவன், அதனுல் புத்தகங்களைப் படித்துப் பொழுது போக்குவதில் இன்பம் காண்கிறேன். அதுவே என் வாழ்க்கையாகவும் அமைந்து விட்டது.

சும்மா பொழுது போக்குவதற்கென்றே புத்தகங்கள் படிப்போர் உண்டு. புதிய புதிய விஷயங்களே அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு படிப்பவர் பலர். தூக்கம் வரவேண்டும் என்பதற்காக ஏதாவ தொரு புத்தகத்தின் துணையை நாடுவோரும் உளர். பிறர் தங்களை அறிஞர்-மெத்தப் படித்தவர்-என்று கருத வேணும் என்ற ஆசையோடு புத்தகங்களைச் சுமக்கிறவர்களும் இருக்கிருர்கள். கண்டது கற்றுப் பண்டிதன் ஆக முயல்வோரும் உண்டு. உலகம் பல விதம்!

坪 水

வாழ்க்கையைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, உல கத்தைப்பற்றி எவ்வளவோ உண்மைகளை உணர்ந்து கொள்வதற்குப் புத்தகங்கள் உதவ முடியும். ஒருவ துக்கே எல்லா அனுபவங்களும் கிட்டிவிட முடியாது. அறியவேணும் என்ற ஆசை உடையவர்கள் அனுபவ சாலிகளின் எழுத்துக்கள் மூலமும் மிக நிறையவே அறிந்து கொள்ளலாம்.

அறிந்து கொள்ள வேண்டும் எனும் அவா பூனை யைக் கொன்றுவிடும் ( க்யுரியாஸிட்டி கில்ஸ் தி கேட்”) என்று ஒரு பழமொழி உண்டு. பல பழ மொழிகளைப் போலவே இதுவும் அபத்தமானதுதான்.

"ஆராயும் ஆவல் அறிவுக்கு அவசியமானது. அறியும் ஆவல் ஒருபோதும் பூனேயைக் கொன்றதில்லை.