பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5

மனைவி செய்த துரோகம், மனைவியிடம் தனக் குள்ள காதல், அந்தக் காதலுக்காக அவன் செய்த தியாகம் பற்றி எல்லாம் அவன் உணர்வோடு பேசு கிருன்.

அவன் தனது குடும்ப ரகசியங்களைக் கூடச் சிறி தும் கூசாமல் சொல்லலானன். அவ் இரகசியங்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டதல்ை அவனுக்கு ஆறு தல் ஏற்பட்டது போலும். இன்னும் ஒரு மணி நேரம் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால், அவன் உள்ளம் முழுவதையும் வெளியே கொட்டியிருந்தால், அவனுக்கு நன்ருக இருந்திருக்கும். டாக்டர் அனுதாபத்தோடு கேட்டுக் கொண்டிருந்தால், ஒருவேளை அவன் மனம் தேறி அநாவசியமான தவறுகள் இழைக்காமல் திருப்தி அடைந்திருக்கவும் கூடும். ஆகுல் அப்படி நடக்க வில்லை.

டாக்டர் வெறுப்பாகப் பேசிஞர். தன்னை அவன் அவமதித்து விட்டதாகவும், தனது உணர்ச்சிகளே அலட்சியப்படுத்தியதாகவும் குறை கூறிஞர். பனக் காரர்களின் காதல் லீலைகள் பற்றிக் கேவலமாகப் பேசி ஞர். அவனது உணர்ச்சி மாறுதல்களைக் கவனிக்க மனம் இல்லாமல் அவர் ஏசினர். இன்னொருவனின் துன்பத்தை ஏளனமாகக்கருத உனக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்ருர்.

செல்வன் தாராளமாகப் பணம் தர முன் வந்தான். அதற்காகவும் டாக்டர் அவனைப் பழித்தார், அவனும் கூச்சலிட்டான்; அத்தகைய வார்த்தைகளை அவர்கள் குடி போதையிலோ, நினைவிழந்தோ கூடப் பேசி யிருக்க மாட்டார்கள். இருவருக்கும் அவரவர் துன்ப மும், துன்பப்படுவோனின் தன்னல மனப் பண்பும் தான் மேலிட்டு நின்றன. துன்பம் மனிதர்களை ஒன்று