பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

முடிவில், ஒரு குழந்தை மன்னனே அதிசயமாக நோக்கி, ஆகாகா என்று சிரித்தது. ஏஹே, ராஜா சட்டை கிட்டை எதுவுமே உடுத்த வில்லையே. அம்மணமாக அல்லவா இருக்கிருர்!’ என்று கை கொட்டிச் சிரித்தது. - | 1

குழந்தை எந்தப் பொறுப்பையும் பதவியையும் வகிக்கவில்லை; அந்தப் பொறுப்புக்கு அது தகுதி அற்றது என்று சொல்வார்களே என்ற பயமும் அதற்குக் கிடையாது. அது அறிவித்த உண்மை-ஒவ்வொரு வரும் உணர்ந்த உண்மை-கூட்டம் நெடுகிலும் பேரொளி பெருவதாயிற்று, மன்னனும் உணர்ந்த உண்மைதானே அது! ஆடையற்ற நிலையில் இருப்பது இப்போதுதான் அவனுக்கு அவமானமாகப் பட்டது. ஊர்வலம் குழப்பத்தில் முடிய, மன்னன் அரண்மனைக்கு ஒடிஞன், அயோக்கியர்கள் எப்பொழுது, எங்கே எப்படி ஒடி மறைந்தார்கள் என்கிற விஷயம் யாருக்கும் தெரியாது! - -

சுவையான இந்தக் கதை ஆண்டர்சன் கட்டுக் கதைகளில் ஒன்று ஆகும். இதே போல் சுவையான ஒரு கதை-வீளுதி வீணன் ஒருவனைப் பற்றியதுஅராபிய இரவுக் கதைகளில் வருகிறது.

பெரும் பணக்காரன் ஒருவன். மிகுந்த தமாஷ் பிரியன் போலும் பெரிய மாளிகை வாசியான அவனத் தேடி வருகிறவர்களை அவன் ஆரவாரமாக வரவேற்பது வழக்கம். ரத்தினக் கம்பளம் பரப்பிய அறை. பெரிய மேஜைகள் அழகான நாற்காலிகள், ஆடம்பரமான சூழ்நிலை. இவற்றுக் கெல்லாம் மேலானதாக அமையும் அவனது உபசாரம். -

வந்தவரை விருந்து உண்ணும்படிமேஜை முன் அமர்த்துவான் அவன். தானும் உட்கார்ந்து கொள்