பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2】

வான். உயர்தர இனிப்பு வகைகளைப் பரிமாறுங்கள். மதிப்பு மிகுந்த மதுவகைகளைக் கொண்டு வாருங்கள்: என்று கூப்பாடு போடுவான்,

ஆட்கள் வருவார்கள். துக்க முடியாதபடி பாத்தி ரங்களைத் தூக்கி வருவது போலவும், பரிமாறுவது போலவும் அபிநயிப்பார்கள். சாப்பிடுங்கள், நண்பரே! இதைத் தின்று பாருங்கள். ருசியாக இல்லை? இந்த மது எப்படி?’ என்று வீட்டுக்காரன் அளப்பான். தான் மிகுதியும் சுவைத்து உண்பது போல் நடிப்பான், எதிரே இருப்பவர்களை உபசரித்து உற்சாக மூட்டுவான்.

விருந்தாளி ஒன்றும் புரியாமல் விழிப்பான். பெரிய வன் தன்னைக் கேலி பண்ணுகிருனே என்று திகைப் டான். பசி வேறு இருக்கும். கோபம் கொண்டு ‘என்னய்யா, விளையாடுகிறீரா? என்பது போல் ஏதாவது சொல் உதிர்ப்பான். அவ்வளவுதான். வீட்டுக்காரன் வெகுண்டு, அவனுக்குச் சரியான பூசைக் காப்பு கொடுத்து விரட்டி விடுவான்.

இத்தகைய அயோக்கிய சிகாமணியிடம் ஒரு நாள் ஒரு வீணன் வந்து சேருகிருன். வீட்டுக்காரன் காணுது கண்ட நண்பனை மீண்டும் சந்திக்க நேர்ந்தது போல் உவகைப் பெருக்குக் காட்டி வரவேற்ருன். குதுசகல மாக உபசரித்தான். சாப்பிடுமையா நண்பரே! வயிறு கொள்ளு மட்டும் உண்டு களியும். குடித்து மகிழும்!”

என்ருன்,

ஆட்கள் வந்து போவதையும், பரிமாறுவது போல் பாவலாப் பண்ணுவதையும், எதிரே இருக்கிற தடியன் தின்று சுவைப்பது போல் நடிப்பதை யும் வந்தவன் கண்டு, புரிந்து கொண்டான். வீட்டுக்காரனுக்குத் தகுந்தபடி தானும் நடிப்பது என்று தீர்மானித்துச் செயல் புரியலான்ை; தின்பண்டங்