பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அனுபவித்த உணர்வுகளே எழுதும் எழுத்தாளர்களே எண்ணும்போது, 'இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் : என்று தான் நினைப்பது வழக்கம்.

ருஷ்ய எழுத்தாளர்களான கே. பாஸ்டோவஸ்கி, மிக்கெயல் பிரிஷ்வின் ஆகியோர் தங்கள் கதைகளில் காடுகளைப் பற்றி அதிகமாகவும், அழகாகவும் வர்ணித் திருக்கிருர்கள். இவர்களைப் போல் காடுகளில் திரியும் வாய்ப்பு எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது !’ என்ற வருத்தும், இவர்கள் எழுதிய கதைகளைப் படித்ததும் எனககு ஒ இட்டடது.

பிறகு, நம் நிலைமை அம்மா பெரிது என்று அக மகிழ்க!' என்று எனக்கு நானே போதித்துக்கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டது, ருஷ்யாவைச் சேர்ந்த ஒய். ரிட்கூ என்ற எழுத்தாளனின் எழுத்துக் களே ப் படித்தபோதுதான்......

அவன் சுக்ஷ (Chukchi) இனத்தைச் சேர்ந் தவன். இவ் இனத்தினர் தூந்தரப் பிரதேசத்தில் வசிப் பவர்கள். அலிடெட் கோஸ் டு தி ஹில்ஸ்’ என்கிற சோவியத் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள இடமும் இன மும் இவர்களுடையதே......

-பூதத்துவ உண்மைகள் ஜியாகரபி படித்த நமது அறிவிலே திலைத்து நிற்கலாம். ஆழப் பதியாமல் மங்கி மறைந்தாலும் மறைந்திருக்கலாம். எனினும், அவை பற்றி மனித உணர்வுகள் எடுத்துச் சொல்லும் போது நமக்கு விசேஷமான வியப்பு உண்டாகாமல் போவதில்லை......

அந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரம் ஒன்றைக்கூடப் பார்த்ததில்லை. மர நிழல் பூமியில் படியும் அழகைக் கண்டதேயில்லை.