பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சொல் ஆராய்ச்சி என்பது மிகவும் ரசமான விஷயம்தான். இன்று அவர் பல சொற்களைப்பற்றிக் குறிப்பிட்டார். முகம் என்கிற சொல் தமிழ்ச் சொல் இல்லையாம். அது சமஸ்கிருத வார்த்தையாம். . . . . . s

நான் சிரித்தேன். நமது தனித்தமிழ் அன்பர்கள் கூட முகம், முகம் என்றுதானே எழுதி வருகிருர்கள்! திருவள்ளுவர்கூட முகம் என்ற பதத்தை உபயோகித் திருக்கிருரே?’ என்றேன். -

அதனுல் அது வடசொல் இல்லே என்ருகி விடுமா? சொல் ஆராய்ச்சிக்காரர்கள்தான் ஆதாரத்தோடு சொல் கிருர்களே' என்ருர் எனது அண்ணு. 。こ

முகம் என்கிற வடசொல் திருவள்ளுவர் காலத்தி லேயே தமிழாகிவிட்டது. சரி. அப்படி அந்தச் சொல் தமிழில் கலப்பதற்கு முன்பு, தமிழர்கள் முகம் என்ற அங்கத்தை எச் சொல்லால் குறித்திருப்பார்களோ? என்று நான் சொன்னேன்.

-"மூஞ்சி’ என்றுதான் அன்றும் குறிப்பிட்டிருப் பார்களோ என்னவோ என என்மனக் குறளி சிரித்தது.

'தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில் திருவள் ஆளுவர் காலம் ஏறத்தாழக் கி. மு. 1 முதல் கி. மு. 300க்கு உட்பட்டது என்று கோடலே அமைவுடையதாகும்’ என்று புலவர் மா. இராசமாணிக்களுர் கால ஆராய்ச்சி’ எனும் நூலில் எழுதியிருக்கிருர்.

எனவே, கி. மு. 300க்கு முந்தியே தமிழில் வேற்று மொழி கலந்துவிட்டது என்று கொள்ளலாம்.

-வேற்று மொழியை நீக்கிவிட்டு, தனித்தமிழில் தான் ஆஎழுதவேண்டும் என்று திருவள்ளுவர்கூட