பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

என்று எண்ணியவாறே அல் நாஷர் காலால் கூடையை பலமாகஉதைத்தான். கூடை உருண்டு, கண்ணுடிப் பாத்திரங்கள் உடைந்து சிதறின. உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு!’ என்ருகி விட்டது.

பால்காரி கதையும் இதேதான். தலைமீது பால் பானையைச் சுமந்து சென்ருள் ஒருத்தி. போகிற: போதே, கனவு வளர்த்தாள். இந்தப் பானை பால் பூரு. வும் விற்ருல் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஆரம் பித்து, இனிய கோட்டைகள் கட்டினுள். முடிவில், தலைமீதிருந்த பானை கீழே விழுந்து பால் முழுவதும் கொட்டிப் போகிறது.

கையில் இருக்கிற கொழுக்கட்டையைச் சுவைத்து மகிழத் தெரியாமல், தடபுடல் கபேயில் கண்ணுடி அலமாரியில் இருக்கிற குஞ்சாலாடு, பாதாம் அல்வாக் களை எண்ணி ஏங்கியவாறே, கிடைத்த கொழுக்கட்டை யையும் இழந்து விடுகிறவர்கள் இல்லாமலில்லை. நிகழ் கால வறட்சி மனித மனசை எப்படி எப்படி எல்லாமோ பாதிக்கிறது.

காய்ந்த ரொட்டியாகவே இருந்தாலும், அதுதான் மிகச் சுவையான, விலை உயர்ந்த தின்பண்டம் என எண்ணிக்கொண்டு ரசித்துத் தின்னும் புத்திசாலிகளும் உண்டு. .

பால்ஸாக் என்கிற பெயர்பெற்ற நாவலாசிரியன் ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டான். நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. ஆனல் வாங்கித் தின்பதற்குக் கையிலே காசு இராது. அவன் ஒட்டலில் மேஜை முன் அமர்ந்து, அங்கு என்னென்ன தின்பண்டங்கள் அன்று தாயாராக இருக்கின்றன என்கிற பட்டியலைக் கவனமாகப் படிப் பான். தான் அன்று எதைச் சாப்பிட்டால் நன்ருக