பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 |

திடீரென்று லுகு குடும்பத் தலைவன்-மாலியின் தந்தை-தன் கையிலிருந்த வேதப் புத்தகத்தை வீசி விட்டு வேகமாக வெளியே ஒடினன். வெறிபிடித்தவன் போல் ஒடிச்செல்லும் அவனையே வியப்புடன் நோக்கி னர் அனைவரும். ஏன் இப்படி ஒடுகிருன் என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.

பாதிரிக்கும் விளங்கவில்லை. பிறகு திருவாளர் லுகுவைச் சிறிது கண்டிக்க வேண்டும் என்று எண்ணி ஞர் பாதிரி. தமக்கு மாமனுராக வரப்போகிற பெரிய மனிதர்தான். அதற்காக? தேவாலயத்தில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியாமல் போளுல்? பாதிரி யாரை வீட்டு மாப்பிள்ளையாகப் பெறுவது என்பது அப்படி ஒன்றும் அல்ப விவகாரம் இல்லையே! அவர் சிறிது கொதிப்புற்ருர். எப்படியோ பிரார்த்தனைக் கூட் டத்தை முடித்து வைத்தார்.

வழக்கமாக அவரைத் தேடிவந்து பாராட்டும் பண்புடைய லுகு அன்று வரவேயில்லே. மாலியும் காத் திருக்கவில்லை. அவள் அம்மாவும் காணப்படவில்லை. பாதிரியாருக்கு எல்லாம் ஏமாற்றமாகவும் எதிர்பாராதது ஆகவும் இருந்தன.

அவர்லுகு குடும்பத்தினரைத் தேடி நடந்தார். பெரு மழை பிடித்து விளாசியிருந்தது நெடுகிலும். இப்போது பொன்னுெளிச் சூரியன் ஜாலம் செய்து கொண் டிருந்தது. பாதிரியார் நீரிலும் சேற்றிலும் அலைந்து செல்ல நேர்ந்தது.

லுகு வீட்டில் அவரை ஒருவரும் வரவேற்கவில்லை. விட்டுத் தலைவி அவர் வருவதைப் பார்த்தும் பாராதது போல் உள்ளே போய்விட்டாள். தலைவர் துரங்குவது : பாசாங்கு செய்து கிடந்தார். அவர்களுடைய புதுமையாக இருந்தது. புரியாததாகவும்