பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

குள் எல்லாம் போராகி முடிந்திருக்கும். நீ மழையை வரவழைத்துக் கெடுத்துவிட்டாய். முந்நூறு ஆயிரம் பாழ்...' என்று லுகுப் பெரியவர் தாக்கினர். ரீமதி அழுது புலம்பினுள்.

"பணமும் பொருளும் பாழ்! உன் மழைவந்து எங்கும் வெள்ளக் காடாக்கி, எல்லாவற்றையும் மூழ்கடித்தது.”

பாதிரியாரும் மனிதன் தானே? எவ்வளவு நேரம் பொறுத்திருப்பார்? அவரும் கோபம் கொண்டார். ‘என்ன உளறல் இது? நானு மழையை வரவழைத் தேன்? ஆள் ஆளுக்கு வேண்டியதை எல்லாம் வர வழைத்துக் கொடுக்கும் சக்தி என்னிடம் இருப்பதுபோல் பேசுகிறீர்களே?’ என்று எரிந்து விழுந்தார்.

பின்னே கோயிலில் நீ பெரிசாக வாயாடிஞயே? அது என்ன நாடகமா?’ என்று தொடங்கி அவரை ஏசி ஞர்கள் வீட்டுக்காரர்கள். அவரை தள்ளிக் கதவடைத்தார்கள். நாய்கள் அவரைக் கடிக்க வந்தன. அனைத்திலும் மேலாக அவரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்து எல்லா ஏற்பாடுகளிலும் கலந்துகொண்ட மாலி வேருெரு யுவளுேடு காதல்பேசி, இளித்தபடி செல்வதை அவர் கண்டார்.

‘எல்லாம் போச்சு. என் குடிதான் முழுகியது? எனக் குமைந்தார் பாதிரி. மரச்சாமான் விற்பனையாள ருக்கும் பிறருக்கும் அவர் தரவேண்டிய மிகப் பெருந் தொகை பற்றியும் இதர குழப்பங்கள் பற்றியும் எண்ணி நடுங்கலானா. பாதிரியார் அப்பொழுதுதான் பேய் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கூனிக்குறுகி உடல் வெடவெட என நடுங்குவதுபோல் தோன்றிஞர்.

இந்தக் கதையை இன்னும் விரிவாகச் சுவைகூட்டி எழுதியிருக்கிருர் ஆண்ட்ரே உப்பிட்ஸ் என்பார்.