பக்கம்:முத்துச்சோளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

இரண்டாம் படம்.


4, 5, 6, 7, 8 நம்பருள்ள சோளத்தின் கதிர்களை 2ம் படத்தில் காணலாம். அவைகளுக்குச் சக்கரைச் சோளமென்று பெயர். நாட்டுச்சோளமும் தங்கவர்ணக் சோளமும் பால்வெள்ளைச்சோளமும் மடல்கள் பசுமையாய், பால்கதிர்களாயிருக்கும் பொழுது மாத்திரம், தின்பதற்கு மதுரமாயிருக்கும். முற்றின பின் தானியமாக உதவும். ஆனால், சர்க்கரை சோளமோ மடல்கள் முற்றி கதிர்கள் சாய்ந்து விழுந்தபின்னுங்கூட, சோளம் பால்போலவே இருக்கும். அதிகமாய்க் காய்ந்தபின் மாத்திரம் தானியத்திற்குதவும். இத்தானியங்கள் மிகுந்த ருசியுடையதாயிருக்கிறது போலவே அதிகக் குணமுடையகாகவு மிருக்கிறதென்று அறிஞர்களால் மதிக்கப்படுகிறது. டேபிள் மேய்ஸ் என்று வழங்கி வருகிறது. தானியத்தின் கண்டுமுதலும் அதிகம். இரண்டு மாசத்திற்குள் இதுவிளைந்து விடுவதால் அதிக லாபம் தரக்கூடிய தென்றே சொல்லவேண்டும். இரண்டு மாசத்திற்குள் விளையக் கூடியதாயிருப்பதினிமித்தம் நல்ல உரங்கொடுத்து தண்ணீர் வாடாமல் பார்த்து வரவேண்டும். இவைகள் பூக்கும்போது கதிர்களின் மெல்லிய இழைபோன்ற குஞ்சங்கள் அதிகப்பனியிலும் மழையிலும் அழுகிப்போகு மியல்புடைய தாயிருக்கின்றன. ஆகையால், அப்படியில்லாத எந்தக் காலத்திலும், அதாவது, ஐப்பசி, கார்த்திகை நீங்கலான எந்தக் காலத்திலும் பயிரிடலாம். இப்பயிர்கள் மழையிலகப்பட்டால் நரைத்துப்போம். பூக்கும்காலத்தில் மழையிலகப்பட்டால் பால் ஒழுகிப்போம். முத்தின காலத்தில் மழையிலகப்பட்டால் முளைத்துப்போமாதலால், ஐப்பசி, கார்த்திகை காலத்து மழையில் அகப்பட்டுக் கொள்ளாதபடி பார்க்க வேண்டும். ஆனால் மழை பஞ்சமா யிருக்கும் இக்காலதர்மத்திற்கு எக்காலமும் போடலா மென்று தோன்றுகிறது.

பலவகையான இச்சோளங்களை முத்துச் சோளந்தானே என்று அற்பமாய் நினைப்போம். தாழ்ந்த ஜனங்கள் சாப்பிடுமாகாரமென்று ஏழனம்பண்ணுவோம். ஆனால் நம்மருமை மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/10&oldid=1521678" இலிருந்து மீள்விக்கப்பட்டது