பக்கம்:முத்துச்சோளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பாலர்களா யிருக்கும்போது பாலுக்குப்பதில் நல்ல ஆகாரமென்று சிறந்த வைத்தியர்களால் சொல்லப்பட்டு, டப்பி டப்பியாய்க் "கார்ண்பிளவர்" என்று வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் கொடுப்பதும் இச்சோளமாவுதான். டப்பியின் மேல் இச்சோளக்கதிர்களின். படமிருப்பதே அதற்குச்சாக்ஷி. இத்தானியமிகுந்து விளையும் அமெரிக்காவில், இவைகளை நன்றாயறைத்து தண்ணீரால் சுத்தம் செய்து மெல்லிய மாவாக்கி கப்பல் கப்பலாக அந்நியதேசங்களுக்கேற்றுமதி செய்கிறார்கள். அவைகள் அமெரிக்கன் பிளவர் என்றும், மரிக்கன் மாவென்றும், மைதாமா வென்றும் அழைக்கப்பட்டு ஒரு சிறு கிராமங்களிலுங்கூட ஏராளமாய் வாங்கி உபயோகப் படுத்தப்படுகிறது. அவைகள் மிகவும் மெல்லியதாகவும் வெண்மை யாகவு மிருப்பதைக் கொண்டு தோசைகள் வார்க்கவும், போளி செய்யவும், பூச்தி, காரப்பூந்தி செய்யவும். ஜிலேபி பிஸ்கோத், ரொட்டிகள், ரோல் ரொட்டிகள் ஏராளமாய்ச் செய்யவும் படுகிறது. இவைகள் ரவாவினால் செய்யப்பட்டவைக ளென்று நாம் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளும் பதார்த்தங்கள் யாவும் பம்பாய் ரவாவென்று அழைக்கப்படும் சோளரவா கலப்புத்தானே. இப்படிச் சிறுவர் முதல் பெரியவர் வரையும் உபயோகித்துவரும் இச்சோளத்தை ஏன் அதிகம் விருத்தி பண்ணாதிருக்க வேண்டும். நாட்டுக்கதிர்கள் கால்பவுண்டு இடையாயிருக்கையில், தங்கவர்ணச் சோளக்கதிர்கள் ஒரு பவுண்டு இடையாயிருக்கிறது. ஒரு பவுண்டுமாவை நாம் 4 துட்டு விலைகொடுத்து வாங்குகிறோம். மூன்று பவுண்டிடையுள்ள சோளத்தை 1 அணா 4 பைசாவுக்கு விற்கிறோம். 1 அணா 4 பைசாவுக்கும் 5 பைசாவுக்கும் எவ்வளவோ வித்தியாசம். 1 பை பெருமானதை 3 பை விலை கொடுத்து வாங்குகிறோம். அமெரிக்கர்கள் சோளத்தினால் மிகுந்த லாபமடைந்து வருகிறார்கள். நம் தேசத்தில் அநேக புஞ்சை நிலங்களும் 'படுகை நிலங்களும்' நெல்லறுத்தபீன் நஞ்சை நிலங்களும் இப்பயிருக்கு மிகவு மேற்றவை. ஒரு ஏக்கருக்கு எச்செலவும் போக 100 முதல் 150 ரூ. வரையும் லாபம் கிடைக்கும் மாவாகவாவது ரவாவாகவாவது செய்யும்பொழுது முன்னையை விட இருமடங்கு லாபந்தரும். கொஞ்சம் கொஞ்சமாக அங்கங்கே விருத்திசெய்து உபயோகப் படுத்திப் பார்த்தால், - நம் நாட்டிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/11&oldid=1521679" இலிருந்து மீள்விக்கப்பட்டது