பக்கம்:முத்துச்சோளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பஞ்சகாலத்தில் மிகுந்த ஆதரவாயிருக்குமென்று நிச்சயமாய் நம்புகிறேன். இச்சோளங்களை நாட்டுமுத்துச் சோளம்போல் சமையல் செய்யலாம், பலகாரங்கள் செய்யலாம். புதிய தென்று தோன்றுகையில் அதைப் பலவிதத்தாலும் ஏழனம்செய்வது மனுட இயற்கை. அதிகப் புத்திமான்கள் பல ஆக்ஷேபனைகளையும் பரீக்ஷையால் அறிந்து அதின் குணத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள். நாமும் அப்படியே பரீக்ஷித்துப் பார்த்தோமானால், மிகுந்த நன்மையைக் காண்போம். நெல்ருசியே மிகுந்துள்ள இச்சோழ தேசத்திலுங்கூடக் கொண்டாடக் கூடியதாயிருக்கிறது. ஒரு பவுண்டு நிறையுள்ள விதைகள், 11/4 ரூ விலையில் எல்லா இங்கிலீஷ்விதை ஷாப்புகளிலுங் கிடைக்கும். நம் நாட்டில் அதிகமாய்ப் பரவவேண்டு மென்றும் விருப்பத்தோடு தஞ்சை ஜில்லா விபசாயச் சங்க அக்ராசனாதிபதி மிஸ்டர். ஆஸ்டின் துரையவர்கள் கேட்டுக் கொண்டதினால், ஒருபவுண்டு நிறையுள்ள விதை 8 அணாவுக்குக் கொடுக்கத்தயார் செய்யப்பட்டிருக்கிறது. கொஞ்ச விதைகள்தான் விதைக்காக சேர்க்கப் பட்டிருக்கிறது.

தட்டைகள்.

1. தட்டைகள்— நாட்டு முத்துச் சோளத்தின் தட்டைகளைப் பார்க்கிலும் இத்தட்டைகள் அதிகத் தித்திப்பாயிருப்பதினால், மாடுகள் தட்டைகளைக் கழிக்காமல் தின்றுவிடும். கதிர்கள் ஒடித்தபின், தட்டைகளை வெட்டிவிடாமல் நிறுத்தி வைத்து அவைகள் பச்சையாயிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிப் போட வேண்டும். மாடுகளை விட்டால் சேதப்படுத்தி விடும். நல்ல வெயிலுள்ள காலமாயிருந்தால், அதிகாலையில் வெட்டி நன்றாய்க் காயவைத்து 8 நாளானபின் கட்டி அடைந்து மழையில் தண்ணீரில் நனைந்து போகாதபடி காப்பாற்றிவைத்தால், மழைகாலங்களில் மிகுந்த உபயோகப்படும். பசுக்களுக்குப் பாலதிகம் ஊறும். நன்றாய்ப்புஷ்டி கொடுக்கும்.

2. கதிர் மடல்கள்— ஒவ்வொரு கதிரிலுள்ள தானியங்களும் மழை பனியினாலும் பக்ஷிகளினாலும், சேதமடையாதிருக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/12&oldid=1521681" இலிருந்து மீள்விக்கப்பட்டது