பக்கம்:முத்துச்சோளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மெல்லிய தாள்களால் மூடப்பட்டிருப்பதை நாம் காணலாம். அவைகள் மாடுகள் நன்றாய்த்தின்னும். அதைத்தவிர வேறு உபயோகம் செய்வதில்லை. அவைகள் மிகவும் மெல்லியதாகவும் வெண்மையாகவுமிருக்கிறதைக் கொண்டு ஜப்பானியர் உபயோகத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். எப்படி யென்றால், தொன்னை போலிருக்கும் அடிப்பாகத்தையும் முரட்டுத் தாள்களையும் நீக்கிவிட்டுத் துண்டுகளாக ஒரே அளவில்வெட்டி சிறு புத்தகமாகச் சேர்த்துத் தைத்து ஸிகரட் சுருட்டுவதற்கு உபயோகப் படுத்துகிறார்கள். 100 தாள் கொண்டது ஒரு புஸ்தகம். ஒரு மடலில் 2 1/2 அங்குல நீளமும் 11 அங்குல அகலமுமுள்ள 6 தாள்கள் கத்திரிக்கலாம். சராசரி 16 தாள்களிருக்கும் ஒரு கதிரில் 2 பை பெருமான புஸ்தகமாகும். ஆகவே, ஒரு கதிருக்கு தானியவரும்படி போக 2 பை தாள்களால் கிடைக்கிறது.

இதுதவிர, இத்தாள்களை ஏராளமாகச் சேர்த்துக் காகிதம் செய்பவர்களுக்கு நல்ல விலைக்குக் கொடுக்கலாம்.

 
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/13&oldid=1521682" இலிருந்து மீள்விக்கப்பட்டது