பக்கம்:முத்துச்சோளம்.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் துணை.

முத்துச்சோளம்.

முகவுரை.

இதில் தங்கவர்ணச்சோளம், பால் வெள்ளைச்சோளம், சர்க்கரைச்சோளம், இவைகளைப் பயிர் செய்யும் விதத்தைப்பற்றிக் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள் சொல்லப் பட்டிருக்கின்றன.

ஆஸ்ட்ரேலியாவில் Golden Ring Maize என்றும் அமெரிக்காவில் Golden Beauty என்றும் பெயர் விளங்கும் தங்கவர்ணச்சோள விதையில் 19 விதைகள் தஞ்சாவூர் விபசாயச் சங்கக் காரியதர்சியாயிருந்த ராவ் பகதூர் சீனிவாச பிள்ளை அவர்களால் 1905 வரு மார்ச்சு மாதம் துவக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அப்போது சோளம் பயிர் செய்யும் கால மில்லாதிருந்தாலும், அதை விருத்திசெய்யவேண்டு மென்னும் பிரியத்தினால் மார்ச்சு மாதம் கடைசியில் சாதாரணமுத்துச் சோளம் (பயிர் செய்யும் விதம்போல்) கொஞ்சம் நிலத்தில் பயிரிட்டுக் களைகொத்திக் கொடுத்து, ஈரங்காயாமல் தண்ணீர் விட்டுத்தூரில் மண்ணணைக்கப்பட்டது. சூலை மாதம் மத்தியில் கதிர்கள் முற்றிப் பழுத்துவிட்டன. சோளம் பயிரிட ஏற்றகாலமில்லாதிருந்தும் கூடியவரையில் மணிபிடித்திருந்தது. அவைகளில் அதிகப்பெரிதும் திடமுமான 120 விதைகளைத் தனியாகப் பொறுக்கிப் பூச்சி பிடியாதிருக்கவும், நன்றாய் முளைக்கவு மேதுவாயிருக்கத் தக்கதாய், மாட்டின் மூத்திரமும் சாணமும் சேர்ந்த சகதியில் புரட்டி, கொஞ்சம் சாம்பல் தூவி நாலு நாள் நன்றாய்க் காயவைத்து, ஈரம்காயாமல் மண்பாத்திரத்தில் மூடி வைக்கப்பட்டது. பின் ஆகஸ்டு மாதம் நிலம் தயார் செய்யப்பட்டு, ஆகஸ்டு மாதம் மத்தியில் பொறுக்கி எடுத்த விதைகள் தனியாகவும், மற்ற விதைகள் தனியாகவும் பயிர் பண்ணப்பட்டது. இரண்டு பயிர்களுக்கும் ஒரே மாதிரியே உரம்வைக்கப்பட்டும், களை எடுத்தும், மண்ண்ணைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/2&oldid=1521640" இலிருந்து மீள்விக்கப்பட்டது