பக்கம்:முத்துச்சோளம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தும், தண்ணீர்பாய்ச்சப்பட்டும் வந்தது. இவைகளில் பொறுக்கி எடுக்கப்பட்ட விதைகளிலிருந் துண்டான பயிர்கள் மற்றவைகளைப் பார்க்கிலும் இரண்டுபங்கு அதிக வளர்ச்சியும், பயிர் உறப்பாயும், இருண்ட பச்சையாகவு மிருந்த தோடு, கதிர் பெரிதாகவும், மணி நெருக்கமாகவும் பிடித்திருந்தன. மற்ற விதைகளி லிருந்துண்டான பயிர்கள் வெளுத்து மெலிந்தனவாகவும், கதிர்கள் வாங்காமல் மலடாகவும் போய்விட்டன. இத்தானியம் அதிகப்பிரயோஜனந் தருமென்று கண்டு வருஷாவருஷம் பயிர்செய்யப்பட்டு விருத்தியாகிக் கொண்டேவருகிறது. விதைக்கு வேண்டிய திடமானகதிர்களைச் சிவப்புத்துணியால் அடையாளங்கட்டி நிறுத்திவைத்துக் கொண்டு, மற்றவைகள் ஒருகதிர் அரையணா முதல் ஒன்றரை யணாவரையும் தோட்டத்திலேயே விற்பனையாகிக் கொண்டும் வருகின்றன. தோட்டம் பார்க்கவந்த ஒருதுரையின் மூலமாக இமயமலையில் விதை விற்குமிடத்திலிருந்து (Himalayan Seed Store) பல விதமான சோளவிதைகளிருக்கிற தென்று கேள்விப்பட்டு, அவைகளையும் வரவழைத்துக் கடந்த நான்கு வருஷங்களாகப் பயிர் செய்து வருகிறேன். அவைகளும் முன் சோளம் போலவே நல்ல பலனைத் தருகிறதாகக் காண்கிறேன். இவைகளோடு நாட்டுமுத்துச் சோளத்தில் மஞ்சள், சிவப்பு, வெள்ளைத் தினுசுகளையும் பயிரிட்டிருக்கிறேன்.

க்ஷை சோளங்கள் பயிராகிப்பூத்து விரிந்திருக்கும் சமயத்தில் நாட்டுச் சோளப்பூக்களின் மகரந்தம் தங்கவர்ணச் சோளத்தின் கதிர்களின் குஞ்சங்களில் படும்படி புரட்டப்பட்டது. அவைகளடையாளங் கட்டப்பட்டு, விளைந்தபின் பார்க்கும்பொழுது, நாட்டுச் சோளம் போல் நிறமும் தங்கவர்ணச் சோளக்கதிர்கள் போல் பருமனுமுடையவாய் நூதனமான இரண்டுவிதச் சோளங்களுண்டாகி யிருக்கின்றன. இக்கதிர்கள் ஒவ்வொருவருஷமும் பட்டணத்தில் நடக்கும் Flower Show கண் காட்சிக்கும், மற்றும் பல இடங்களில் நடக்கும் காட்சிக்கும் அனுப்பப்பட்டு கண்காட்சி சங்கத்தாரால் நல்ல வென்று ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

நாளதுவருஷம் மார்ச்சு மாதம் துவக்கத்தில் நடந்ததஞ்சாவூர் ஜில்லா விபசாயச்சங்கத்தில் அக்ராசனாதிபதி R.F. Austin, Esq., I.C.S.,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/3&oldid=1521643" இலிருந்து மீள்விக்கப்பட்டது