பக்கம்:முத்துச்சோளம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

துரையவர்கள் முன்னிலையில் இக்கதிர்கள் சிலவை காட்டப்பட்டன. அச்சமயம் வந்திருந்த கனவான்கள் எல்லாரும் இத்தானியம் இந்நாட்டில் பயிர் பண்ணப்படலாமென்று அபிப்பிராயப்பட்டனதினால், Chairman, அக்ராசனாதிபதி யவர்கள், இச்சோளம் பயிரிடும் விபரத்தையும் கதிர்களின் படத்தையும் அவைகளின் தானிய வரும்படியையும் காட்டும் சிறு குறிப்பொன்று எழுதும்படி விரும்பியதின்மேல் இதை எழுதினேன்.

பயிரிடும் விதம்.


ஆற்றுப் படுகைநிலம் அல்லது கருப்புமண் தரை, பொருக்கு மண் கலந்த செவ்வல்தரை பயிர்களுக்கேற்றது. இப்படிப்பட்ட நல்ல நிலத்தைச் சமமாக்கி ஒரு எக்கருக்கு சுமார் 30 வண்டிக்குக் குறையாமல் அடை எருவாவது மாட்டின் சாணமும் சாம்பலுங்கலந்த எருவாவது போட்டுக் குறைந்த பக்ஷம் 5 உழவாவது உழுது, புழுதியாக்கிக் கிடைகட்டினவுடனே உழுது, அதில் தண்ணீர் பாய்வதற்கு ஏற்றதாக வாய்க்கால் பிடித்துப் பாத்திகளில் 2 அடிக்கு ஒரு சிறுவாய்க்காலாக; 4 அங்குல ஆழத்தில் இழுத்து, அதில் 1 1/2 அடிக்கு ஒவ்வொரு குழியும் 1/2 அடி ஆழமிருக்கும்படி ஒரே கொத்தினால் வெட்டி, அதில் ஒரு கைகொண்ட கிடைக்கக்கூடிய நல்ல உரம் போட்டு மண்விரவி, குழிக் கொவ்வொன்றாக விதைகளைவூன்றி ஈரங்காயாமல் தூக்குத்தண்ணீர் அல்லது பாய்ச்சல் தண்ணீர் விட்டுவரவேண்டும். அதிக ஈரங்கூடாது. விதைகள் முளைத்து சுமார் 20 நாளைக்குப்பின் ஒரு சாண் பயிர்களைச் சுற்றி மெதுவாகக் கொத்தி பின் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். இந்தச்சமயத்தில் பயிர் வெளுத்திருக்குமானால், ஒரு தண்ணீர் காயப் போட்டுத் தண்ணீர் விடவேண்டும். சுமார் முளைத்த 40 நாளைக்குள் 3 அடி உயரமாகும் போது தோகைகள் ஒடியாமல் எங்கும் முங்க வெட்டிச் சோளத்தை சுற்றி ஒரு அடிமண் வரப்புப் போலணைத்துத் தண்ணீர் விடவேண்டும். பயிரின் அடிப்பாகத்திலுள்ள 3, 4 கணுக்களிலிருந்து புது வேருண்டாகி அணைத்த மண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/4&oldid=1521645" இலிருந்து மீள்விக்கப்பட்டது