பக்கம்:முத்துச்சோளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ணில் வேரூன்றுமாதலால் இந்தச்சமயத்திலும் ஒவ்வொரு பயிரின் தூரிலும் கொஞ்சம்கொஞ்சம் உரம்வைப்பது நல்லது. இதற்குப்பின் ஈரங் காயாமல் தண்ணீர்விட்டு வரவேண்டும். 2, 3 நாளைக்குத் தண்ணீர் கட்டிநிற்கும்படி விடக்கூடாது. களைகள் அதிகமாய் முளைக்கக்கூடிய நிலத்திற்கு மண்ணணைக்கு முன்னேயாவது அணைத்த பின்னாவது கூட ஒரு களைகொத்துவது நல்லது.

மார்க. இரண்டுடிற்கு மேற்பட்ட கதிர்களில் திடமாயுள்ள இரண்டைத்தவிர மற்றவைகளை எடுத்துவிட்டால் மீதியானவை நன்றாய்ப் பெருத்து மணிபிடிக்கும். பால்பிடிக்கும் காலத்தில் கிளிகளாவது நரிகளாவது நாய்களாவது சேதப்படுத்தாமல், காத்துவரவேண்டும். நரிகளுள்ள இடத்தில் சோளக்கொல்லைக்குச் சமீபத்தில் முளையடித்து நாயைக்கட்டினால் நரிகள்வராது,. நாய்களை அவிழ்த்துவிட்டால் கட்டைகளை மடக்கிக் கதிர்களைத் தின்று சேதப்படுத்திவிடும். மார்கழி மாதம் முதல் தை மாதம் வரையும், சித்திரை மாதம் முதல் வைகாசி மாதம் வரையிலும், ஆடி முதல் ஆவணி வரையிலும் விதைகள் போட ஏற்ற காலம். தைப்பட்டமும் ஆடிப் பட்டமும் நல்ல பட்டம். சித்திரைப் பட்டம் மலைநாடுகளுக் கேற்றது. சித்திரைப்பட்டம் காற்றிலகப்படுமாதலால் சற்று ஒதுக்கும் கலந்த அகத்தி நிழலுமுள்ள இடங்களில் போட்டு வாடாமல் தண்ணீர் விட்டுவரவேண்டும். ஆடிப் பட்டம் பால்பிடிக்கும் காலத்தில் மழையி லகப்படா தபடி பிந்தாமல் முந்திக்கொள்ள வேண்டும். நாட்டுமுத்துச்சோளத்தைப்போலவே, செய்காலுக்குத் தகுந்தபடி மூன்றுமுதல் மூன்றரை மாசத்திற்குள்ளாகக் கதிரொடிக்கலாம். இதில் 65 நாளைக்குள் விளையும் சர்க்கரை சோளத்திற்கு 15 நாளில் களை கொத்தி 30 ம் நாளில் மண்ணணைக்க வேண்டும். களைகொத்தல், மண்ணணைப்பு முதலியவை இதற்குச் சற்று முன்னதாகவே செய்யவேண்டும். மண்ணணைக்குங் காலத்தில் விசேஷித்த உரங்கள் கொடுப்பது நல்லது.

முத்துச் சோளக்கதிர்களைப்பற்றிய சில முக்கிய குறிப்புகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/5&oldid=1521646" இலிருந்து மீள்விக்கப்பட்டது