பக்கம்:முத்துச்சோளம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இதில் தங்கவர்ணச் சோளத்தின் கதிர் 16 அவுன்ஸ் அல்லது 1 பவுண்டு கனமாகிறது. பால் வெள்ளைச் சோளத்தின் நிறை 10 1/2 அவுன்ஸும், நாட்டு முத்துச்சோளத்தின் கதிர் 41 அவுன்ஸும் கனமுடையதாயிருக்கிறது. இந்தக்கனத்தைக்கொண்டு நாட்டு முத்துச் சோளக்கதிர்கள் ஒருபங்குகனமானால் தங்கவர்ணச் சோளத்தின் கதிர்கள் அப்படி நாலுமடங்கும், பால் வெள்ளைச்சோளத்தின் கதிர்கள் 21 மடங்கும் கனமுள்ளதாகிறது. இதில் நாட்டுமுத்துச் சோளக்கதிர்களை விட மற்ற இரண்டு சோளங்களும் அதிகம் கண்டு முதல் கிடைக்கிறதென்று பிரத்தியக்ஷமாய்த் தெரிகிறது. இது தவிர இரண்டாவது படத்தில் 1, 2, 3 நம்பர்களில் கண்டபடி ஒரு கதிரின் தானியத்தின் நிறையையும் சக்கையின் நிறையையும் பிரித்துப் பார்ப்போமானால் மிகுந்த வித்தியாசம் விளங்குகிறது. இரண்டாவது இலக்கமுள்ள நாட்டுச்சோளத்தில் தானியம் மிகவும் சிறிதாயும், சக்கை பெரிதாயுமிருக்க நாம் பார்க்கலாம். அதோடு நடுச்சக்கையின் உள்பாகம் கடினமாயும், தானியம் அதிகக் கடினமில்லாததாயு மிருக்கிறது. இது இப்படி இருக்கையில் 1, 3 நம்பரிலுள்ள தங்கவர்ணச்சோளமும், பால்வெள்ளைச்சோளமும் நடுச்சக்கை சிறுத்தும் தானியம் பெருத்து மிருக்கிறது. இதோடு சக்கையின் உள்பாகம் கடினமின்றி மிருதுவாகவும், தானியமோ மிகவும் கடினமாயும் ஊட்டமாயு மிருக்கிறது. மேலும் தங்கவர்ணச்சோளத்தில் 100 பவுண்டு நிறையுள்ள கதிர் எடுத்துக் கொண்டால் அதில் 85 பவுண்டுதானியமும், மீதி 15 பவுண்டு சக்கையுமிருக்கிறது. நாட்டுமுத்துச்சோளத்தில் 100 பவுண்டுக்கு 71 பவுண்டு தானியமும், 29 பவுண்டு சக்கையுமிருக்கிறது. பால் வெள்ளைச்சோளத்திலோ 100 பவுண்டுக்கு 91 பவுண்டு தானியமும் 9 பவுண்டு சக்கையுமிருக்கிறது. நாட்டு முத்துச்சோளத்தின் மணிகளைப் பார்க்கிலும் தங்கவர்ணச் சோளமணிகள் ஆழமாகவும் அகலமாயிருப்பதும், தங்கவர்ணச் சோளத்தைப்பார்க்கிலும் பால் வெள்ளைச்சோளம் அதிக அகலமாகவும் ஆழமாகவும் கனமாகவுமிருப்பதே இப்பேதத்திற்குக் காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்துச்சோளம்.pdf/8&oldid=1521676" இலிருந்து மீள்விக்கப்பட்டது