பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்துப்பாடல்கள்.pdf30. எங்கள் நாடு

மல்லியொடு முல்லைமலர் மணங்கமழும் நாடு;
அல்லியொடு தாமரையின் அழகுமிகும் நாடு.

பள்ளர்களும் மள்ளர்களும் பண்மிழற்றும் நாடு;
வள்ளல்களும் வீரர்களும் வாழ்ந்திருந்த நாடு.

கைத்தொழிலும் வாணிபமும் கற்றறிந்த நாடு;
வித்தையினில் வல்லவர்கள் வீற்றிருந்த நாடு.

அவ்வைதிரு வள்ளுவர்நல் லறம்உரைத்த நாடு;
எவ்வெவரும் போற்றுகின்ற எங்கள் தமிழ் நாடே.முத்துப்பாடல்கள்.pdf